Homeசெய்திகள்கட்டுரைபெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமானுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமானுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

-

- Advertisement -
தந்தை பெரியாரை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சையான கருத்து குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியார் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளை கூறினார். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியங்களை எழுதியவர்களுக்கு எல்லாம் நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்களா? தமிழ் மொழியை இழிவாக பேசிய பின்னர் உங்களிடம் என்ன சீர் திருத்தம் இருக்கிறது? உங்களுக்கு திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் எதிரி. பிறகு எப்படி நீங்கள் சீர்திருத்த வாதி? நீங்கள் எப்படி கொள்கை வழிகாட்டி? என்று பேசினார்.

தொண்டைமான் கிராமசபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் - சீமான் கண்டனம்!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண்ணியம் குறித்தும், காமத்தை குறித்தும் பெரியார் பேசியதாக சீமான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு ஆதாரங்களை கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கோவை இராமகிருஷ்ணன், நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அது மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் , ஆதாரங்களை கேட்டனர். அதற்கு எல்லா ஆதாரங்களையும் நீங்களே முடக்கி வைத்துள்ளீர்கள். அதை நாட்டுடமை ஆக்குங்கள், அதன் பின்னர் ஆதாரங்களை கேளுங்கள் என்று கூறினார். அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் பெரியாரிய இயக்கத்தினர், ஆதரவாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தனர். அதில் அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் சீமானின் கருத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 20 தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுள்ளது. தந்தை பெரியார் பேசியதாக கூறப்படும் சர்ச்சை பேச்சு முதன்முறையானது இல்லை. இதற்கு முன்பு பலபேர் பேசி ஆதாரங்களை வழங்க முடியாமல் சிக்கலில் மாட்டியவர்கள் இருக்கிறார்கள்.

பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமானுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

கடந்த 2017ம் ஆண்டு பெரியார் காமத்தை குறித்து இப்படி பேசியதாக செய்திகள் பரவத் தொடங்கியது. பெரியாருக்கு எதிரான சில இயக்கங்கள் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் பெரியார் பெண்களை குறித்து இப்படி பேசியிருக்கிறார் என்று பதிவு செய்தனர். இந்த செய்தி 1953ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலையில் வந்துள்ளதாக அவதூறு கருத்துகளை பரப்பி வந்தனர். அதை அப்போதே திராவிட இயக்கத்தினர் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளனர். 2020ல் அதே செய்தியை பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பரப்பினார். அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியபோது வாட்ஸப்பில் வந்தது என்று பதிலளித்தார். அதன் பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு ஜாமீனில் சென்றார்.

விடுதலை பத்திரிக்கை

இந்நிலையில் இதே கருத்தை மீண்டும் சீமான் பேசியுள்ளார். ஒரு கட்சியின் தலைவர் குறைந்தபட்சம் பொறுப்பு கூட இல்லாமல் தவறான தகவலை பரப்பி சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பான செய்தி 1953ம் ஆண்டு மே 11ம் தேதி விடுதலை நாளிதழில் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அன்றைய தேதியில் வந்த விடுதலை 4 பக்கங்களை கொண்டது. அதில் சென்னையில் நடைபெறவுள்ள திராவிடர் கழகத்தின் மாநாடு தொடர்பான செய்திகள் அதிகம் இடம்பெற்றிருந்தது.

விடுதலை பத்திரிக்கை

இதுதொடர்பாக நிறைய ஊடகங்கள் ஆய்வு செய்ததில் சீமான் சொன்ன கருத்துகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அன்றைய நாளிதழில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் குறித்தும், சென்னையில் நடைபெறவுள்ள திராவிடர் கழகத்தின் மாநாடு குறித்த செய்திகள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இதன் மூலம் சீமான் பேசியது அனைத்தும் பொய்யான தகவல்கள் என்றும் நிரூபனமாகி உள்ளது.

விடுதலை பத்திரிக்கை

MUST READ