spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!

தன்கரை மிரட்டிய மோடி? அடுத்து நடக்கும் அதிரடி! பின்னணியை உடைக்கும் தராசு ஷ்யாம்!

-

- Advertisement -

பீகார் தேர்தலை முன்னிட்டு தன்கரை பதவி விலக செய்துவிட்டு, நிதிஷ்குமாரை குடியரசுத் துணை தலைவராக நியமிக்க பாஜக சதி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்திருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- குடியரசுத் துணை தலைவர் ஜகதீப் தன்கர் மருத்துவக் காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மையான காரணம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. இதற்கு முன்பு வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தங்களது துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பைரோன் சிங் ஷெகாவத், குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியுற்றதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். பொதுவாக குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விலக ஒரு காரணம் இருக்கும்.

சுதந்திர இந்தியாவில் குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானமே வந்து கிடையாது. ஆனால் ஜகதீப் தன்கருக்கு எதிராக அப்படி வந்தது. மேற்குவங்க ஆளுநராக அவர் பொறுப்பு வகித்தபோது அவருக்கும், மம்தா அரசுக்கும் வந்த சர்ச்சைகள் எல்லோரும் அறிந்ததே. ராஜஸ்தானை சேர்ந்த தன்கர், சந்திரசேகர் அரசில் இணை அமைச்சராக இருந்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த அவர் 2003ல் பாஜகவில் இணைந்தார். 2014ல் ராஜஸ்தானில் பாஜகவின் வெற்றிக்கு பங்காற்றியதால், ஜகதீப் தன்கருக்கு ஆளுநர் பதவி தரப்பட்டது. அதற்கு பிறகு குடியரசுத் துணை தலைவராகினார். இன்னும் 2 வருடம் பதவிக்காலம் இருக்கும் நிலையில், ராஜினாமா செய்துள்ளார்.

ஜெகதீப் தன்கருடைய திடீர் ராஜினாமா பிரதமர் மோடிக்கு தெரிந்ததுதான் என்று சொல்கிறார்கள். தற்போது புதிதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு, குடியரசுத் துணைத் தலைவர் பதவி வழங்கிட வேண்டும் என்று அம்மாநில பாஜக கோரிக்கை விடுத்திருக்கிறது. பீகாரில் தேர்தல் காலகட்டம் உள்ள நிலையில் மோடி, அமித்ஷாவுக்கு தெரியாமல், அவர்கள் அப்படி சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. பீகார் மாநில அரசியலில் இருந்து நிதிஷ்குமாரை வெளியேற்ற வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.  பீகாரில் சார் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் பாஜக, தங்களுக்கு சாதகமாக செய்கிற திருத்தத்தை தான் அஸ்திரமாக வைத்துள்ளது.

பீகாரில் நிதிஷ்குமாரின் செல்வாக்கு பூஜியத்திற்கு சென்றுவிட்டது. அவரது உடல்நிலையும் சரியில்லை. தன்கரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, நிதிஷ்குமாரை குடியரசுத் துணை தலைவர் ஆக்க முயற்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனென்றால் நிதிஷ்குமார், குடியரசுத் துணை தலைவர் ஆகிவிட்டால் அதை வைத்து வாக்கு கேட்கலாம். மற்றொருபுறம் ஜகதீப் தன்கருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதற்கான வலுவான ஆதரங்கள் இருக்கின்றன. அதை நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ராஜினாமா செய்விட்டார் என்று டெல்லியில் உள்ள நண்பர்கள் சொல்கின்றனர்.

டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில், அவருக்கு எதிராக தான் பாஜக உள்ளது. அவர் தன் மீதான தகுதிநீக்கத்தை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மற்றொரு நீதிபதி, சேகர் யாதவ் மீது வெறுப்பு பேச்சு காரணாக தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ளார். யஷ்வந்த் வர்மா மீது தகுதி நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான எம்பி-க்கள் ஆதரவு உள்ளது. அதனால் அந்த மனுவை விசாரித்து தான் ஆக வேண்டும். தற்போது எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாகவே இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாமல் உள்ளது. பகல்காம் தாக்குதல், பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் போன்றவற்றுக்கு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக உள்ளது. இந்த திருத்தம் மேற்கொண்டால் அவருடைய வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிக்கப்படும். பாஜக எப்போதும் கடைபிடிக்கின்ற வியூகம் என்பது, அதனுடைய கூட்டணி கட்சியை பலவீனப்படுத்தி, அவர்களுடைய இடத்தை கைப்பற்றுவதுதான். ஷிண்டே காலத்தில் இருந்து எவ்வளவோ பழைய உதாரணங்கள் எல்லாம் அதற்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்லும்போது, பாஜக அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்கிற வாதம் இதிலிருந்துதான் வருகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கும் அந்த பயம் உள்ளது. நம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தம் போன்றவை அதன் நீட்சிதான் என்று பார்க்கிறார்.

இதேபோல் நிதிஷ்குமாரும் பாஜக மீது அதிருப்தியில் தான் இருக்கிறார். அதாவது மோடி அரசு கவிழாமல் காப்பாற்றும் இரண்டு சக்திகளும், இன்றைய தேதிக்கு மோடி அரசின் மீது பழைய வாஞ்சையுடன் இல்லை. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தான் இருவரும் ஒட்டியிருக்கிறார்கள். தற்போது பிரச்சினையையே மாற்றுகிறார்கள். குடியரசு துணை தலைவர் ராஜினாமா,  நிதிஷ்குமார் அந்த பொறுப்புக்கு வருகிறார் என்று பிரச்சினையையே மாற்றுகிறார்கள்.

சந்திரபாபு நாயுடுவும், பாஜகவுக்கு நெருக்கமான முதலமைச்சர். நிதிஷ்குமாரும் முதலமைச்சர். இருவரும் மூத்த அரசியல்வாதிகள். அப்போது ஏன் சந்திரபாபு நாயுடுவுக்கு குடியரசு துணை தலைவர் பொறுப்பு கொடுக்கவில்லை. நிதிஷ்குமாருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வருகிறது. காரணம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நிதிஷ்குமார் அரசுக்கு கெட்ட பெயர் உள்ளது. அவருக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியில் மோடி வெளிநாடு செல்கிறார்.எனவே பாஜக குட்டையை குழப்புகிற வேலையை தான் செய்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ