தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான எதிர்க்கட்சி முகம் என்பது கிடையாது என்றும், 4 கட்சிகள் சேர்ந்து 40 சதவீத வாக்குகள் வந்துவிடும் என்பது அரசியல் தெரியாதவர்களின் பேச்சாகும் என்று ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.

ஜே.பி.நட்டாவின் தமிழக வருகை மற்றும் தவெக அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஊடகவியலாளர் மில்டன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- தாவெக – பாஜக கூட்டணி அமைவதற்கு 2 நபர்கள் வேலை பார்ப்பதாக முந்தைய நேர்காணலில் கூறி இருந்தேன். அவர்கள் யார் என்பது மிகப்பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. இன்னும் 2 நாட்களில் அவர்களே வெளியே வந்துவிடுவார்கள். டெல்லி எல்லாம் போய் பேரம் பேசும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய்க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு என்பது கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ப்பது அல்லது பாஜகவில் சேர்ப்பது தான். 234 தொகுதிகளிலும் ஆட்கள் நிறுத்த வாய்ப்பு இல்லை.
ஆதவ் அர்ஜுனா, அடுத்த தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஒரே வாய்ப்பு. அதோடு சேர்ந்தாலும் பரவாயில்லை நம்மை வளர்த்துக்கொள்ளலாம். அடுத்து வரும் 15 ஆண்டுகளில், ஒரு எம்ர்ஜிங் ஸ்டாராக மாறலாம் என்று விஜயிடம் சொல்லி நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய்க்கு தெரியாது இது தன்னுடைய கூப்பு என்று. போய் உட்கார்ந்தால் என்ன நடக்கும்? அதிமுக என்கிற நல்ல கட்டமைப்பு கொண்ட கட்சியையே, பாஜகவினர் அடித்து சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 60 சீட்டுகளுக்கு மேல் ஜெயித்த கட்சியையே கையை முறுக்கி உள்ளே உட்காரவைத்துவிட்டார்கள். ஆனால் தவெகவில் இன்னும் பல மாவட்ட செயலாளர்கள், பல கிளைச் செயலாளர்கள் போட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி எதுவுமே இல்லாத கட்சியை எளிதாக வலித்து சுருட்டிக்கொண்டு போக மாட்டார்களா?
2026ல் எடப்பாடி முதலமைச்சராக விஜய் பிரச்சாரம் செய்யும் நிலையை நோக்கித் தான் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு சென்றார் அதிகபட்சமாக என்ன சொல்வார்கள் என்றால் 234 தொகுதிகளில் கணிசமான சீட்டுகள் வேண்டும் என்றால், விஜய் ஆரம்பத்தில் 112 என்று சொன்னார். அப்படி எல்லாம் இல்லை என்று கூப்பிட வேண்டும். அதற்கு விஜய் ஒத்துக்கொண்டு வர வேண்டும். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதற்கு தற்போது வழியும் இல்லை வாய்ப்பும் இல்லை. பாஜக கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு விஜய் என்ன வியாக்யானம் கொடுப்பார் என்றால், திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காக எந்த தியாகத்தை செய்ய தயார் என்று சொல்வார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக நிகராக எதிர்க்கட்சி முகம் கிடையாது. எடப்பாடி, விஜய் என்று 4 கட்சிகளின் 10 சதவீத வாக்குகளை சேர்த்தால் 40 சதவீதம். ஸ்டாலின் 40 சதவீத வாக்குகளுடன் முதல்வராக உள்ளார். இங்கே 4 முதல்வர் வேட்பாளர்கள் சேர்ந்து 40 சதவீதம் வந்துவிட்டோம் என்று சொன்னால், அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாதவர்களின் கணக்கு ஆகும். இது உங்களுக்கு வேண்டுமானால் எடுபடலாம் என்று நீங்கள் நம்பலாம். ஆனால் தேர்தல் முடிவுகள் எளிதாக சொல்லிவிடும்.
விஜயை தொடர்ந்து சீமானும் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிறது. கூட்டணியில் பாமக, தேமுதிக, தவெக, தமாகா, நாம் தமிழர் என்று பல்வேறு கட்சிகள் சேர்கிறபோது, அவர்களுக்கு எவ்வளவு இடங்களை கொடுக்க முடியும். எடப்பாடி முதலமைச்சராக நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொள்வார். அதேபோல், சீமான், விஜய் போன்றவர்களும் எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொள்வார்கள். இது எங்கே ஒட்டும். பவன் கல்யாண் பல தேர்தல்களை பார்த்தார். நின்றார். துணை முதல்வராக வந்தார். ஆனால் நீங்கள் எதுவுமே செய்யவில்லை. உங்களுக்கு என்ன வேல்யூ உள்ளது என்றுதான் பார்ப்பார்கள். முதல் தேர்தலிலேயே உள்ளே போக வேண்டும் என்றால் அந்த நிலைமைதான் வரும். உங்களுக்கு தேவை என்ன திமுக வீட்டிற்கு போக வேண்டும். அப்போது வாங்க சேர்ந்துகொள்ளலாம். வர முடியவில்லையா கையை முறுக்குவார்கள். அவர்களிடம் அமலாக்கத்துறை உள்ளது. அவற்றை எல்லாம் எதிர்க்க துணிச்சல் வேண்டும்.
விஜயை தனியாக நிறுத்தி, திமுகவின் வாக்குகளை பிரிப்பது, அதன் வாயிலாக பாஜக கூட்டணிக்கு வலிமை சேர்த்து அதை அதிகாரத்தில் உட்கார வைப்பது என்று பாஜகவின் திட்டமாகும். இரண்டாவது கூட்டணி சேர வேண்டியது நடைபெற்று விட்டது. ஆனால் தனியாக நின்று பார்க்க வேண்டிய வேலையை செய்யாமல் தவெக தத்தளிக்கிறது. அப்போது என்ன வேண்டும்? நாம் உருவாக்கிய ஒரு பொருளை நம்முடன் சேர்த்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் கிடைத்துவிடும் என நினைக்கிறார்கள். இதை இரண்டாவது தேர்தலில்தான் செய்வார்கள். ஆனால் முதல் தேர்தலிலேயே செய்யக்காரணம் விஜய். அரசியல் தெரியாத மோசமான வேலைகள். அது இங்க கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
ஜே.பி.நட்டா தமிழ்நாடு வருகிறார். ஓபிஎஸ் வாரணாசி செல்கிறார். சந்திப்புகள் எல்லாம் எதோ ஒரு வேலைத்திட்டத்துடன் தான் நடைபெறுகிறது. டிமாண்டுகள் எல்லாம் பேசப்பட்டு கூட்டணி வலுவாக உள்ளது என்பதை காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியே மாறிவிட்டது. இது இயல்பான கூட்டணி என்று சொல்வது வேறு. இதை எடப்பாடி ராஜதந்திரம் என்று சொல்வது, சேரவே சேராத ஒன்றை சேர்க்கிறபோது அது ராஜதந்திரமாகும். விஜய் வாயிலாக நடைபெறுகிற அரசியல் நிகழ்வுகளுக்கு எதிராக திமுக செய்த வேலைகள் ராஜதந்திரமாகும். மதிட்டமிடப்பட்ட சில செயலை சாதுரியமாக முறியடிக்க திமுக சில வேலைகளை செய்தது.
அதிமுக உடனான கூட்டணியையே சாதுரியமான செயல் என்று சொன்னால் உங்கள் கூட்டணி பலவீனமாக உள்ளது என்றுதான் அர்த்தமாகும். நட்டா வருகை, ஓபிஎஸ் பயணம், தினகரன் வேட்பாளர் அறிவித்தது எல்லாம் அதிமுக கூட்டணியில் நடக்கக் கூடிய பல பிரச்சினைகளுக்கான சின்ன சின்ன நகர்வுகளாகும். டிடிவி, ஓபிஎஸ் கேட்பது வேறு. எடப்பாடி கொடுப்பேன் என்பது வேறு. இவை எல்லாவற்றுக்கும் மெல்டிங் பாய்ண்டாக இருக்கும் நயினார் எடப்பாடியோடு டிராவல் பண்ண ஒரு வாய்ப்பை உருவாக்குகிறாரா என்ற கேள்வி வேறு. நட்டாவின் வருகை இதை எல்லாம் சரி செய்யுமா? என்பதும் கேள்வி. இதெல்லாம் ஒன்று சேர்வது டிசம்பரில்தான். அதில் விஜய் கூட்டணி வருகிறதா என்று தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.