spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை90 நாட்களில் புதிய பிரதமர்! விரட்டும் ஆர்.எஸ்.எஸ்! கெஞ்சும் மோடி!

90 நாட்களில் புதிய பிரதமர்! விரட்டும் ஆர்.எஸ்.எஸ்! கெஞ்சும் மோடி!

-

- Advertisement -

நரேந்திர மோடியை வரும் நவம்பர் மாதத்திற்குள்ளாக பிரதமர் பதவியில் இருந்து அனுப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக முயற்சித்து வருவதாக  மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திடம் இருந்து  மோடிக்கு அளிக்கப்படும் அழுத்தம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாஜகவின் வாக்கு அபகரிப்பு திட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பார்ட்னராக செயல்படுகிறது. பாஜகவின் திட்டம் குறித்து 2 வருடங்களுக்கு முன்பாக பேசுகிறபோது ஒரு விஷயத்தை சொன்னேன். பாஜகவின் திட்டம் என்பது தமிழ்நாட்டை அபகரிப்பது. கர்நாடாக, பீகாரை அபகரிப்பதாகும். கடந்த காலங்களில் நமது கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். நம்முடைய கொள்கைகளை மக்களிடம் புகுத்தி அதை நிறைவேற்ற வேண்டும். இதுதான் ஒரு கட்சியின் அஜெண்டாவாக இருக்கும்.

தற்போது எப்படி உள்ளது என்றால், இந்த மாநிலத்தின் வருமானத்தை எப்படி கொள்ளையடிப்பது. நம்முடைய ஆட்களுக்கு ஒப்பந்தங்களை கொடுத்து எப்படி திருடுவது என்றுதான். இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய தொடங்கிவிட்டனர். புதிய நாடாளுமன்றத்தை கட்டியது, பாலங்களை கட்டுவது, உ.பி.யில் சாலைகளை போடுவது என அனைத்தும் குஜராத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் தான் செய்கிறார்கள். அனைத்து வளங்களையும் சுரண்டி, குஜராத் முதலாளிகளுக்கு வழங்குவது பிரதமர் மோடியின் அஜெண்டாவாகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, அவர் குஜராத்திகளுக்கே எல்லாவற்றையும் செய்கிறார் என்பதுதான் கோபம்.

கடந்த மக்களவை தேர்லின்போது, தேர்தல் ஆணையத்திற்கும், ஆர்.எஸ்.எஸ் – மோடி கூட்டணிக்கும் போட்டி கடுமையாக இருந்தது. ஆஎஸ்எஸ் மோடி தோற்க வேண்டும் என்று வாரணாசி தொகுதியில் வாக்களிக்கவில்லை. கடைசி நேர சண்டையில் தேர்தல் ஆணையத்தை வைத்து மோடி வெற்றி பெற்றார். இல்லாவிட்டால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த போதே, அவர்கள் தேர்தல் ஆணையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர்.

அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட், பெருந்தன்மையுடன் இதில் தலையிடவில்லை என்று கூறி விலகிவிட்டார். இதுவே மிகப்பெரிய மோசமான விஷயமாகும். அப்போதே போராட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும்.  சந்திரசூட் என்கிற தனி நபருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் போகலாம்.  நாட்டு மக்களின் பிரதிநிதியாக இருந்துகொண்டிருக்கக்கூடிய தலைமை நீதிபதிக்கான உரிமையாகும்.  அதை எப்படி நீங்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று யாரும் கேட்கவில்லை. அன்றைக்கே அவர்கள் தேர்தல் ஆணையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  ஓய்வு பெறுகிறாா்.

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, ஆதாரை ஆவணமாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்னார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் அதை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது என்பது ஊர் அறிந்த திருட்டு ஆகும். அதிகாரம் தங்கள் கையில் உள்ளதால் தேர்தல் ஆணையரை வைத்துக்கொண்டு ராகுலை உள்ளே தள்ள பார்க்கிறார்கள். ராகுல்காந்தியிடம் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொல்வது அவரை கைதுசெய்வதற்காக தான். ஆனால் ராகுல் விடுவதுபோல இல்லை. இறந்தவர்களை எல்லாம் அழைத்துவந்து டீபார்ட்டி வைத்துள்ளார்.

மோடி செய்வது ஒரு சர்வாதிகார போக்கு ஆகும். இதற்கு விடிவுகாலம் வராவிட்டால் இந்தியா வேறு வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. மோடிக்கு தேர்தல் மட்டும் அல்ல. எல்லா வகைகளிலும் பிரச்சினைதான்.  மோடி, அவருடன் இருக்கும் கும்பல் அகற்றப்பட வேண்டும். தேர்தல் ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் மீண்டும் தேர்தல் ஆணையரை நியமிக்கும் தன்னுடைய அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். தலைமை நீதிபதி கவாய் அவர்கள் இதை நிறைவேற்றினால்தான் உண்டு. முன்னாள் தலைமை நீதிபதியின் முடிவு செல்லாது என்று தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தால் தான் சரியாக இருக்கும்.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, சுயசார்போடு இருக்க வேண்டும் என்றும், அமெரிக்க டாலர்களை சேர்ந்து இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் சொல்லி வருகிறார். அதனை மறுக்க முடியாமல் மோடி பயப்படுகிறார். டிரம்ப், மோடியை எதிர்ப்பதற்கு காரணம் அவர் ரஷ்யா உடன் நெருக்கமாக இருப்பதுதான். பிரதமர் மோடிக்கு இன்னும் 2 மாதத்தில் பிறந்தநாள் வருகிறது. அத்துடன் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் சுதந்திர தின உரையின்போது ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கடந்த இயக்கம் என்று புகழ்ந்து பேசினார். வரும் நவம்பர் மாதத்தில் மோடியை பிரதமர் பதவியில் இருந்து அனுப்பவதில் ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் முறைகேடு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைதி காக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ