spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!

நிதிஷ்குமாருக்கு தலைவலி ஆரம்பம்! நடக்கப் போறதை சொல்றேன் கேளுங்க! பாலச்சந்திரன் க்ளியர் ரிப்போர்ட்!

-

- Advertisement -

பீகாரில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க அனுமதித்தது தான் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் தேர்தல் முடிவுகள் மற்றும் என்டிஏ கூட்டணியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி கூட்டணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பாஜகவை பொறுத்தவரை அவர்கள் தங்களுடைய கூட்டணி கட்டமைப்பை மிகவும் இருக்கமாகவும், நெருக்கமாவும் வைத்திருந்தனர். சிராக் பாஸ்வான், மாஞ்சி போன்றவர்களுக்கும் நிதிஷ்குமாருக்கும் ஆகாது. ஆனால், அவர்களிடம் உள்ள வாக்கு வங்கியை இழந்துவிடக்கூடாது என்பதற்காக பாஜக அனைவரையும் ஒருங்கிணைத்தது.

ஆனால் இந்தியா கூட்டணியில் அப்படி கட்சிகள் இடையே ஒற்றுமை நிலவவில்லை. இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஒவைசி போன்றவர்களை சேர்க்கவில்லை. காங்கிரசுக்கு கள அளவில் சட்டாம்பிள்ளை தனத்துடன் நடந்துகொள்கிறது. மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி 20 இடங்கள் தான் கேட்டனர். ஆனால் கமல்நாத் அவர்களை கூட்டணியில் சேர்க்கவே இல்லை. அதனால் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. அதேபோல் பீகாரில் இந்தியா கூட்டணி ஒற்றுமை இன்றி காணப்பட்டது.

பாஜகவை பொருத்தவரை தமிழ்நாடு, கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கட்சிக்காக உயிரை கொடுத்து வேலை செய்யும் ஒரு பெருங்கூட்டம் உள்ளனர். காங்கிரசுக்கு அப்படியான தொண்டர்கள் முழுக்க முழுக்க காணாமல் போய்விட்டது. காங்கிரசுக்கு ம.பி., ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை தவிர வேறு எங்கும் அடிமட்ட அளவில் தொண்டர்களே கிடையாது. தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவும் மிகவும் தாமதம் செய்தனர்.

ஆனால் பாஜக, ஜேடியு கூட்டணியில், 20 வருஷ நிதிஷ் ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தது. இப்படியான சூழலில் தேர்தல் நடைபெற்றிருந்தால் இரு கட்சிகளில் ஆட்சியை பிடிக்கும் கட்சிக்கும், 122 இடங்களை தாண்டி 5 அல்லது 10 இடங்கள் தான் கூடுதலாக கிடைத்திருக்கும் . ஆனால் அப்படி இல்லாமல் இப்படி ஒரு மிகப்பெரிய வெற்றியை என்டிஏ கூட்டணி பெற்றதற்கு முழுக்க முழுக்க காரணம் இந்திய தேர்தல் ஆணையம் தான்.

எஸ்.ஐ.ஆர் தொடங்கி தேர்தல் ஆணையம் பல்வேறு முறைகேடுகள் செய்தது. தெலுங்கானாவில் நிதி வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை ரீதியான முடிவு ஒன்றை எடுத்தது. அதற்கு பிறகு அங்கு தேர்தல் அறிவிப்பு வெளியானபோதும், திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு நிதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் இருமுறை மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேவேளையில் பீகாரில் மட்டும் ரூ.10,000 வழங்க அனுமத்தது எப்படி? இதன் மூலம் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வில்லை என்பது தெளிவாகிறது. அது பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. வாக்காளர்கள் தங்களுக்கு நேரடியாக கிடைக்கும் நன்மைகள், அல்லது தீமைகளை பொறுத்தே ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். அப்படி பார்க்கிறபோது நிதிஷ்குமார் அரசு 1.25 லட்சம் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. என்டிஏ கூட்டணிக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைப்பதற்கு ரூ.10ஆயிரம் வழங்கியது தான் காரணம்.

பிரதமர் மோடி எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் தமிழ்நாட்டில் திமுகவினர், பீகாரிகளை துன்புறுத்தியதாக சொல்கிறார். ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயில் பொருட்கள் வைத்து இருக்கும் சாவியை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக சொன்னார். நாட்டில் அரசியலின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது என்பது உண்மை. அப்படி தாழ்ந்துகிடக்கும் அரசியலை மறுபடியும் மேலே கொண்டுவர வேண்டிய கடமை இருப்பவர்கள் தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களாகும்.அங்கே தோற்று போனால் நம்முடைய குடியரசு உலுத்துப்போன கோட்டையாகும். அந்த பயம் தான் உண்மையில் பெரிய அச்சமாக இருக்கிறது.

பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஓவைசியின் கட்சி 5 இடங்களை பிடித்துள்ளது. சமூக நீதியை பேசுகிற ஆர்ஜேடிக்கும் வாக்குகள் அப்படியே மாறாமல் உள்ளது. ஆனால் காங்கிரசை சமூக நீதியை ஆதரிக்கும் கட்சியாக மக்கள் நம்புவதே கிடையாது. ராகுல்காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் பேசுகிற சமூகநீதிக்கு உண்மையாக இருக்கிறார்கள். ஆனால் அடுத்தக்கட்ட தலைவர்கள் அப்படி இருப்பதில்லை. காங்கிரஸ் இன்றைக்கு செய்ய வேண்டிய வேலை என்பது, படித்த இளைஞர்களை ஊக்குவித்து அடுத்தக்கட்ட தலைவர்களாக கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரசுக்கு விடிவு காலம் கிடையாது. பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றாலும், ஆளப் போவது பாஜக தான். நிதிஷ்குமாரை ஆள அனுமதித்தாலும், அவர்கள் ஜே.டி.யு கட்சிக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவார்கள்.

இன்றைக்கு ஜேடியு அல்லாமல் பாஜகவுக்கு 122 இடங்கள் இருக்கின்றன. அப்போது நிதிஷ்குமாரை முதல்வராக வைத்துக்கொண்டே அவருடைய கட்சிக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவார்கள். அந்த அணி நிதிஷ்குமாரை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்கள். அப்போது கூட்டணிக்காக, அவர்களை தாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி பாஜக ஏற்றுக்கொள்ளும். சிராக் பாஸ்வான், பாஜக ஆதரவு இல்லாமலே தனித்து வளரும் வல்லமை கொண்டவர். அப்படிபட்டவர்களை பாஜக ஒருபோதும் வளரவிடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ