பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்று ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டு உள்ளது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து ஐ.நா. சபை முன்னாள் அதிகாரி கண்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- போர் நிறுத்தம் காரணமா இந்தியா – பாகிஸ்தான் இடையில் இருக்கும் பதற்ற நிலை தணிந்து, அமைதி ஏற்படும் என்று தான் நினைக்கிறேன். இன்றைக்கு நண்பகல் இரு நாடளுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் பேச உள்ளனர். அப்போது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் எப்படி உறுதி படுத்துவது. அதில் உள்ள குறைகளை எப்படி கலைவது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் பாகிஸ்தான் அத்துமீறியதாக நாம் சொன்னோம். நாம் அத்துமீறியதாக அவர்கள் சொன்னார்கள். இதுபோன்று அத்துமீறல்களை தவிர்த்து, போர் நிறுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இருதரப்பும் ஆலோசனை மேற்கொள்வார்கள். போர் நிறுத்ததை நாங்களே முடிவு செய்தோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னதாக நான் பார்க்கவில்லை.
அமெரிக்கர்கள் தொடக்கம் முதலே இந்த விஷயத்தை கவனமுடன் அணுகினார்கள். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அறிந்த அதிபர் டிரம்ப் இது வருந்த தக்கது என்றும், விரைவில் முடிவுக்கு வரும் என்றும் சொன்னார். அதன் பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், இரு தரப்புடனும் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தனர். சவுதி அரேபியாவின் துணை வெளியுறவு அமைச்சர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டெல்லி வந்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.பின்னர் அவர் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து வந்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இரு தரப்பினரிடம் பேசிக் கொண்டிருந்ததை ஊடகங்கள் தெரிவித்தன. சனிக்கிழமை காலை அன்று இந்தியா, 3 ராணுவ விமான தளங்களை தாக்கியதாகவும், நாங்கள் அதற்கு எதிர்வினை ஆற்ற தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் வெளிப்படையாக தெரிவித்தது. சிறிது நேரத்திற்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்பட்டதாக சொன்னார். இந்நிலையில், பாகிஸ்தான் முப்படை தளபதி ஆசிம் முனீர் உடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேசினார்.
சர்வதேச செய்தி ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்றால்? நாம் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாக்கி இருக்கிறோம். அதற்கு அருகாமையில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கக்கூடிய இடம் அமைந்துள்ளது. பாகிஸ்தானியர்கள் என்ன அஞ்சினார்கள் என்றால், தலைமையகத்தை இந்தியர்கள் தகர்த்துவிடுவார்கள். அதை அமெரிக்கர்கள் இன்டெலிஜென்ஸ் மூலம் உணர்ந்தார்கள். இந்த செய்தியை துணை அதிபர் வான்ஸ் , அதிபர் டிரம்பிடம் தெரிவித்தார். டிம்பின் ஆலோசனையின் பேரில், துணை அதிபர் வான்ஸ் நேரடியாக பேசிய பின்னர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள பலர் முயற்சி செய்தார்கள். துணை நின்றனர். இருதரப்பிடமும் பேசினார்கள்.
பாகிஸ்தான் பிரதமர் பேசியபோது 5,6 நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். அவர் மிகவும் நன்றி தெரிவித்தது அமெரிக்காவுக்கு. அதற்கு அடுத்தபடியாக சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, பிரிட்டனுக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் நாம் யாருக்கும் நன்றி தெரிவிக்கவில்லை. அப்படி பேசி இருந்தால் இந்த தலையீட்டை நாம் ஆதரிப்பதாக அர்த்தமாகும். அதற்கு காரணம் நமது விவகாரங்களில் 3-வது நாட்டின் தலையீடு இருக்கக்கூடாது என்றுதான் எண்ணுகிறோம். அதை தவிர்க்க கூடிய இடத்திற்கு தான் நாம் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்திற்கு போக இன்னும் நாட்கள் ஆகும். அமெரிக்கா ஒரு முடிவு எடுத்தால் அதை சுயமாக செயல்படுத்தி விட முடியும். அதற்கு பிறகு தன்னுடைய நட்பு நாடுகளை அழைத்து ஏன் இப்படி செய்தோம் என்று விளக்கும் அவசியம் அதற்கு கிடையாது. ஆனால் இந்தியா அந்த இடத்தில் இல்லை. ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்ற அடுத்த நாளே 5 முக்கிய நாடுகளை அழைத்து இதை ஏன் செய்தோம் என்று சொன்னோம். அடுத்த நாள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 13 நாடுகளின் தூதர்களை அழைத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஏன் நாம் இதை செய்தோம் என்று விளக்குகிற நிலையில்தான் நாம் உள்ளோம்.
அமெரிக்காவை பொறுத்தவரை பாகிஸ்தானின் அணு ஆயுத தலைமையத்தை நாம் தகர்த்துவிடுகிற நிலைக்கு சென்றுவிடுவோம் என்று அச்சம் உள்ளது. இதனை அமெரிக்கா தன்னுடைய நலன் கருதி செய்ததாக பார்க்கக்கூடாது. அமெரிக்கா சொன்னால் உலக நாடுகள் கேட்கும் நிலையில் தற்போது இல்லை. காசா – இஸ்ரேல், உக்ரைன் – ரஷ்யா போரின்போதே அவர்களின் நிலை தெரிந்துவிட்டது. டிரம்ப் சர்வதேச ஆர்டரையே மாற்றிவிட்டார். தங்களுக்கும், ஐரோப்பாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார். அமெரிக்கா, இந்தியாவிடமும், பாகிஸ்தானிடம் நெருக்கமாக உள்ள நாடு ஆகும். குறிப்பாக பாகிஸ்தானை அவர்கள் நெருக்கமாக வைத்துள்ளார்கள். சீனாவின் ஆளுமை என்பது அமெரிக்கர்களை கவலை அடைய செய்துள்ளது. சீனாவால் தங்களுடைய வேலைவாய்ப்பு போனதாக அமெரிக்கர்கள் எண்ணுகிறார்கள். சீனா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. ஆப்பிரிக்காவில் இன்றைக்கு சீனாதான் மிகப் பெரிய சக்தியாக உள்ளது. உலக அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மைக்கு சீனா போட்டியாக வளர்ந்துள்ளது. அவர்களை கண்டு அமெரிக்கர்கள் மட்டுமின்றி உலக நாடுகளே அஞ்சுகின்றனர்.
பாகிஸ்தானுக்கும், சீனாவுக்குமான நட்பு என்பது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. பாகிஸ்தானியர்கள், ஒன்றுபட்ட இந்தியாவுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 5 ஆயிரம் சதுரஅடி நிலத்தை சீனர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டனர். சீனர்களுக்கு அடுத்த நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானியர்களுக்கு சீனா மிக மிக தேவையாகும். அவர்கள் அதை வளர்த்து வருகிறார்கள். அவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையும், நல்லெண்ணமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் இன்று திடீரென ஒரு பதற்றம் அமெரிக்காவுக்கு வந்துவிட்டதாக சொல்வது தவறாகும். நமது ரபேல் விமானங்களை அவர்கள் சுட்டு வீழ்த்தியதாக சொல்வது எல்லாம், சீனாவிடம் இருந்து அவர்கள் வாங்கிய ஜேசி 10 செங்டு என்கிற விமானம் மூலம்தான். அதேபோல், பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு துருக்கியாகும். பாகிஸ்தானுக்கு கிடைத்த நண்பர்களை போன்று ஒரு நாடும் நமக்கு கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, சவுதி அரேபியா இருப்பதை போன்று ஒரு நாட்டை கூட நம்மால் சொல்ல முடியாது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடைபெற்ற சண்டையில் யாரிடம் அதிக தொழில்நுட்ப ஆயுதங்கள் உள்ளன என்றுதான் பார்க்கிறோம். இந்த சண்டையில் நிறைய நபர்களை அவர்களும் ஈடுபடுத்தவில்லை. நாமும் ஈடுபடுத்தவில்லை. முழுக்க முழுக்க டெக்னாலஜிக்கல் வார்பேர். நாம் டிரோன்களை பயன்படுத்தினோம். அவர்களும் டிரோன்களை பயன்படுத்தினார்கள். அதேவேளையில் பாகிஸ்தான் மலிவான விலையில் வாங்கிய டிரோன்களை வைத்து, நாம் வைத்திருந்த விலை உயர்ந்த ரபேல் விமானங்களை தகர்த்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.