spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை36 செகண்டில் நீக்கப்பட்ட ஓட்டு!  சிக்கிய இஸ்ரேல் ஹேக்கர்! ஞானேஷ்க்கு ஆப்படித்த ராகுல்!

36 செகண்டில் நீக்கப்பட்ட ஓட்டு!  சிக்கிய இஸ்ரேல் ஹேக்கர்! ஞானேஷ்க்கு ஆப்படித்த ராகுல்!

-

- Advertisement -

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக ராகுல்காந்தி எழுப்பியுள்ளது மக்களின் அடிப்படையான வாக்குரிமை குறித்த பிரச்சினை என்றும்,  இதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருவதுதான் ஒரே தீர்வு என்றும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரம் குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, கர்நாடக மாநிலம் ஆலந்த் தொகுதியில் எப்படி ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியாமலே, சம்பந்தமில்லாத நபர்களால் நீக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கி காட்டியிருக்கிறார். 6,018 வாக்காளர்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எப்படி போலியாக வைக்கப்பட்டிருக்கிறது? என்பதை ஆதாரங்களோடு ராகுல்காந்தி சொல்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதன் பேரில் 2023ம் ஆண்டில் கர்நாடக மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில காவல்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பு தரவில்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரிக்கை வைத்தவர்கள் குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் விசாரணை நடத்தினர். அப்போது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் இருக்கும் ஏதோ ஒரு தொலைபேசி எண் மூலமாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணப்பத்துள்ளனர்.

அவர்களுக்கும் கர்நாடக வாக்காளர் பட்டியலுக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், கர்நாடகாவில் இருக்கும் நபர்களின் சிம் கார்டுகளை குளோனிங் செய்து, அவர்களின் கோரிக்கை போன்று இவ்வாறு விண்ணப்பித்துள்ளனர். அந்த நபர் யார்? என்று பார்த்தோம் என்றால்? ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முதலாவதாக உள்ள நபரின் பெயரில் வாக்காளர்களின் பெயரை நீக்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி கோரிக்கை விடுத்த நபர்களை காங்கிரஸ் தொடர்புகொள்கிறபோது, தாங்கள் அப்படி கோரிக்கை வைக்கவே  இல்லை என்று சொல்கிறார்கள். அப்படிபட்ட வாக்காளர்களை பத்திரிகையாளர் சந்திப்பின்போது நேரில் அழைத்து பேச வைத்தார் ராகுல்காந்தி. கோதாபாய் என்கிற பெண் சொல்லி 12 பேரின் பெயர்களை நீக்க கோரிக்கை வைக்கப்படுகிறது. அவரிடம் கேட்கிறபோது அப்படி தான் கோரிக்கை வைக்கவில்லை என்று கோதாபாய் சொல்கிறார்.

அடுத்தபடியாக சூர்யகாந்த் என்பவர்,  12 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பத்தை 14 நிமிடங்களில் வைத்துள்ளார். இது சாத்தியமில்லாது. 3வதாக நாகராஜ என்கிற வாக்காளரை கொண்டு வருகின்றனர். அவர் 2 வாக்காளர்களை அதிகாலை 4 மணிக்கு நீக்கியுள்ளார். 36 செகண்டில் 2 விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளார். இது மனிதர்களால் சாத்தியம் இல்லாத செயலாகும். இதன் மூலம் இந்த நடவடிக்கைகள் ஒரு மென்பொருள் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. இது தனித்தனி நபர்களால் செய்யப்படவில்லை. மையப்படுத்தப்பட்ட ஓரு கால்சென்டர் போல  வைத்துக்கொண்டு திட்டமிட்டு காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு ஆட்டோமேட்டிக் புரோகிராம். அந்த புரோகிராமை வைத்துக்கொண்டுதான் இவை எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைதான் ராகுல்காந்தி  விளக்குகிறார்.

ஆலந்த் தொகுதியில் 6,018 பேர் பட்டியலில் நீக்கப்பட்ட விவகாரத்தில், தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர். பாட்டீல் புகார் அளித்து அதில் பெரும்பானோரின் புகார்கள் போலியானவை என்று கர்நாடக தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. பிரச்சினை என்ன என்றால் இப்படியான போலியான கோரிக்கை வைத்தது யார் ? என்கிற குற்றவியல் வழக்கு விசாரணை ஏன் முன்னேறவில்லை என்பது தான் கேள்வியாகும். ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் இருந்து அவசரமாக ஒரு அறிக்கையை விடுகிறார்கள். வாக்காளர்களின் பெயரை ஆன்லைனில் நீக்கும் வேலையை பொதுமக்களால் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

இதைதான், ராகுல்காந்தியும் சொல்கிறார். பொதுமக்கள் அதை செய்ய முடியாது. யார்  செய்ய முடியும் என்றால்? இ.ஆர்.ஓ. தான் இந்த வேலையை செய்ய முடியும். அப்படி இருக்கும்போது இது எப்படி சாத்தியமானது? கர்நாடக காவல்துறை 18 மாதங்களாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்புகிறார்கள். மொபைல் போன் எந்த ஊரில் இருந்து பயன்படுத்தப்பட்டது. எந்த இடத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவு செய்தனர். அவர்கள் பயன்படுத்திய இணையதளத்தின் ஐ.பி. அட்ரஸ் ஆகியவைதான் காவல்துறை கேட்பது. இது கிடைக்குமானல் இதை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியும். 18 மாதங்களாக இதனை தேர்தல் ஆணையம் கொடுக்க மறுக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணமாக உள்ளது.

இப்படியும் ஒரு பிரதமரா? சமூக வலைதளங்களில் விவாதம்

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த கணினி வல்லுநர் மாதவ் அரவிந்த் தேஷ்பாண்டே இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். ராகுல்காந்தி சொல்வது போல நிச்சயமாக செய்ய முடியும். நடைபெற்றிருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் சொல்கிற காரணம் நியாயமானது அல்ல என்று சொல்கிறார். இப்படி வாக்காளர் பெயரை முறைகேடாக நீக்குவதற்கு ராகுல்காந்தி, வாக்கு திருட்டு பேக்டரி என பெயரிட்டுள்ளார். தொழிற்சாலைகள் செயல்படுவது போல பல பாகங்களாக பிரித்து வேலை பார்த்துள்ளார்கள். எல்லாவற்றையும் இணைத்து பார்க்கிறபோதுதான் இதில் நடைபெறும் முறைகேடுகள் தெரியவரும்.

2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். அதன்படி, தேர்தல் ஆணையருக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் சிவில் அல்லது கிரிமினல் வழக்குகள் தொடர முடியாது என்று சட்டம் கொண்டு நிறைவேற்றினார்கள். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தேர்தல் ஆணையரை நீக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர், அமித்ஷா ஆகியோர் நியமிக்கும் முறையை கொண்டுவந்தனர்.

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!
Photo: PIB

இந்நிலையில், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், காங்கிரசிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியது தானே என்று கேட்கிறார். ஏன் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால்? அப்படி நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டால் பின்னர் அது குறித்து பொதுவெளியில் பேச முடியாது. ராகுல்காந்தி இவ்வளவு தீவிரமான பிரச்சினையை பெங்களுரில் அம்பலப்படுத்தினார். தற்போது வாக்காளர்கள் எப்படி  நீக்கினார்கள் என்று அம்பலப்படுத்தியுள்ளார். இதை மக்கள் மத்தியில் இருந்து நீக்குகிற வேலையை தான் ஊடகங்கள் கூட்டாக செய்து வருகின்றன. ஏற்றத்தாழ்வு மிக்க இந்த சமுதாயத்தில் சமத்துவத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அனைவருக்குமான வாக்குரிமை என்று அம்பேத்கர் சொல்கிறபோது வெள்ளைக்காரன் முதல் ஆர்எஸ்எஸ் வரை அனைவரும் எதிர்த்தனர். அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பதன் மூலம்தான் அரசியல் ரீதியில் அம்பானிக்கும் ஒரு வாக்கு எனக்கும் ஒரு வாக்கு என்று வந்தது. இந்த சமத்துவத்தை கூட ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.

2014ல் முதன் முறையாக பாஜக வெற்றி பெற்ற உடனேயே தங்களுக்கு யார் வாக்களிக்க மாட்டார்களோ அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கியுள்ளனர். இது காங்கிரஸ், திமுகவின் பிரச்சினையா? அடுத்து எஸ்.ஐ.ஆர். வரப் போகிறது. ராகுல்காந்தி எழுப்பியுள்ளது மக்களின் அடிப்படையான வாக்குரிமை குறித்த பிரச்சினை. இதை நீதிமன்றத்திற்கு சென்று தீர்க்க முடியாது. ஊடகங்கள் இந்த உண்மையை பேசப் போவதில்லை. தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு எந்த பயனும் இல்லை. ஒரே ஒரு வழி இதை தெரிந்துகொண்டு வாக்குரிமை பறிப்புக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருவதுதான் ஒரே வழி. இதை புரிய வைப்பதுதான் நம் அனைவரின் பணியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ