Homeசெய்திகள்ஆவடிஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

-

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனையை ஆவடி எம்எல்ஏ நாசர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து உதயமானது ஆவடியில் அதிநவீன மருத்துவமனை.. 45 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆவடி அரசு பொது மருத்துவமனையை முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கடந்த 2020ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆவடியில் புதிய பொது மருத்துவமனை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு மே மாதம் 26.90 கோடி மதிப்பிட்டில் ஆவடியில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக பல்வேறு அதிநவீன வசதிகளுடன் இரண்டாம் நிலை மருத்துவமனை கட்ட ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் 45 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து பணிகளும் முடிவுற்றது.

இந்நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை மருத்துவமனை கட்டிடத்தை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சா.மு நாசர்,ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் புதிதாக நிறுவப்பட்டுள்ள சி.டி ஸ்கேன் அறை போன்றவற்றையும் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இங்கு அவசர சிகிச்சை பிரிவு,உள் நோயாளிகள் அறை, அறுவை சிகிச்சை அரங்கம், ஆய்வகங்கள், எம் ஆர் ஐ, சி டி உள்ளிட்ட ஸ்கேன்கள்,எக்ஸ்ரே, இரத்த வங்கி, உள்ளிட்ட அனைத்து வசதிகளின் கூடிய சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டதால் ஆவடி மாநகர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர்.. திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அடுத்து ஆவடி மாநகரில் உதயமானது அதிநவீன அரசு மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது..

 

MUST READ