spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபள்ளி கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதி

பள்ளி கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதி

-

- Advertisement -

பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆவடியில் கல்லூரி, மாணவர்கள் ஆபத்தான முறையில் ஜன்னல் மீது ஏறிகொண்டும்,படியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் சூழல் மாணவர்களை விபத்தில் சிக்கும் நிலைஉருவாகி உள்ளது. எனவே காலை நேரத்தில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளி கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதிஆவடி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரக்கம் பாக்கம்,கண்ணியம்மன் நகர், வெள்ளானூர் ஆகிய பகுதிகளில் நசரத் கல்லூரி,வெல்டெக் கல்லூரி,அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல இயங்கி வருகின்றன.இங்கு சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இவர்கள் தங்கள் பள்ளி ,கல்லூரி செல்ல 61k,61R,120A போன்ற ஒரு சில பேருந்துகளை நம்பி இருக்கின்றனர்.இவை சரிவர வராததால் காலை நேரத்தில் ஒரே பேருந்தில் அதிகப்படியான மாணவர்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அது போன்று ஒரே நேரத்தில் 120A என்ற பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் 300க்கும் அதிகமானோர் பயணித்தால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கிகொண்டும்,சிலர் ஜன்னல் மீது ஏறி நின்றபடியம் பயணம் செய்தனர்.மேலும் சிலர் பேருந்து கூடவே நீண்ட தூரம் ஓடி வர கூடியதை பார்க்க முடிந்தது.இதனால் பேருந்து ஒரு புறமாக சாய்ந்து படியில் தொங்கிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உருவாகி உள்ளது எனவே போக்குவரத்து துறை இந்த மார்க்கத்தில் காலை நேரத்தில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வடமாநிலம் என நினைத்தீர்களா தமிழ்நாட்டை? எச்சரிக்கும் உமாபதி தமிழன்! 

we-r-hiring

MUST READ