ஆவடியில் இன்று (டிச.06) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிக்ஜாம் புயலினால் பதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நிவாரண உதவிப் பொருட்களை வாங்க குவிந்த பெண்கள் 1000-கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் உள்ளே செல்லவும், பின்பு கூட்டத்தின் நடுவே நின்று நிவாரண பொருட்களை வழங்குவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதில் அண்ணாமலை கட்சி உறுப்பினர்களை தயவு செய்து கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.
இருந்தும் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து விலகாமல் கூட்டத்தில் இருந்ததால், பொதுமக்கள் நிவாரண பொருள் வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது, மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சாலையில் பொதுமக்கள் கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானர்
இந்த ரணகளத்திலும் மாவட்ட தலைவர் அஸ்வின்குமார் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி முறையாக நடத்தப்படவில்லை எனவும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு அவதிக்குள்ளாகினோம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெரும் சலசலப்பு உண்டாயிற்று, அதில் ஒருவர் இரத்த காயம் அடைந்தார் என தெரியவந்துள்ளது.