பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒரு மாணவன் மற்றும் ஒரு மூதாட்டி பலி
அரக்கோணம், மேசைவாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கிருஷ்ணா, 17 ; முதலாம் ஆண்டு பாரா மெடிக்கல் பயின்று வந்தார். இவர் நேற்று காலை, அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயிலில் கல்லூரிக்கு சென்றார். அப்போது, இந்து கல்லூரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார்,கிருஷ்ணாவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.
அதேபோல், பட்டாபிராம், நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்தவர் லலிதா, 65. இவர் நேற்று காலை பட்டாபிராம் – இந்து கல்லூரி ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடந்த போது, விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆவடி ரயில்வே போலீசார் இருவர் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.