Homeசெய்திகள்சென்னைமுகப்பேரில் இடிந்து விழுந்த வீடு.. உயிர்தப்பிய 4 பேர்..

முகப்பேரில் இடிந்து விழுந்த வீடு.. உயிர்தப்பிய 4 பேர்..

-

முகப்பேரில் இடிந்து விழுந்த வீடு
முகப்பேரில் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் ரீட்டா இவருடைய கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிடவே தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கோடை விடுமுறையை ஒட்டி அவருடைய பேரன் மற்றும் 2 பேத்திகள் பாட்டி ரீட்டாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இவர்கள் வசித்து வந்த வீடு சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இவர்கள் இந்த வீட்டின் முன்பக்க சுவற்றில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு (மே 30) 8 மணியளவில் திடீரென முன்பக்க சுவற்றின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி ரீட்டா மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டின் ஒரு மூலையில் ஒதுங்கி நின்று நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளனர்.

முகப்பேரில் இடிந்து விழுந்த வீடு

அதேநேரம் வீட்டின் முன்பக்கம் இடிந்து விழுந்ததால், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் , மூதாட்டி மற்றும் சிறுவர்கள் என 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் முகப்பேர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர், இயற்கை சீற்றங்களால் வீட்டில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், சிறுவர்கள் வீட்டில் இருக்கும்போது பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்திச் சென்றனர்.

MUST READ