spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…

பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…

-

- Advertisement -

அம்பத்தூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை அடுத்தடுத்து தெரு நாய் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் சரவண பிரசாந்த். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 7 வயது தன்மதி என்ற மகள் உள்ளார். தன்மதி அருகே உள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுமி தன்மதியை தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. இதே போல் அருகே இருந்த  கவிஸ்  என்ற சிறுவனையும் நாய் கடித்துள்ளது. இதில் இருவரையும் மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதில் தன்மதிக்கு 12 க்கும் அதிகமான இடத்தில் நாய் கடித்ததில் படுகாயங்கள் ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிஸ் என்ற சிறுவனுக்கு ஏற்கெனவே கிட்னியில் பிரச்சனையின் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவர்களை கடித்த நாயை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா். இந்நிலையில் சிறுமியை தெரு கடித்து குதறிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கைதி 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

we-r-hiring

 

MUST READ