spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிக்காக 'பார்க்கிங்' இயக்குனர் சொன்ன ஸ்கிரிப்ட்.... சிம்புவுக்கு சொன்னதை தான் பட்டி டிங்கரிங் பண்ணாரா?

ரஜினிக்காக ‘பார்க்கிங்’ இயக்குனர் சொன்ன ஸ்கிரிப்ட்…. சிம்புவுக்கு சொன்னதை தான் பட்டி டிங்கரிங் பண்ணாரா?

-

- Advertisement -

தலைவர் 173 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிக்காக 'பார்க்கிங்' இயக்குனர் சொன்ன ஸ்கிரிப்ட்.... சிம்புவுக்கு சொன்னதை தான் பட்டி டிங்கரிங் பண்ணாரா?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘தலைவர் 173’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படம் உருவாகப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த படத்தில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். அதாவது சுந்தர்.சி-யின் கதை ரஜினியை திருப்திபடுத்தவில்லை என பல தகவல்கள் வெளியாகின. அதேசமயம் தலைவர் 173 படத்தின் புதிய இயக்குனர் யாராக இருக்கும்? என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் நடைபெற தொடங்கியது. அதன்படி பல இளம் இயக்குனர்களின் பேச்சுகள் அடிபட்டது.ரஜினிக்காக 'பார்க்கிங்' இயக்குனர் சொன்ன ஸ்கிரிப்ட்.... சிம்புவுக்கு சொன்னதை தான் பட்டி டிங்கரிங் பண்ணாரா? இந்நிலையில் தான் ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் ‘தலைவர் 173’ படத்தை இயக்கப் போகிறார் என்றும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படம் கல்லூரி பின்னணியில் உருவாகிறது என்றும் இக்கதை கேங்ஸ்டர் கதையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

we-r-hiring

ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன், சிம்புவிற்கு கல்லூரி பின்னணியில் கதை ஒன்றை கூறியிருந்த நிலையில், அந்த படமானது STR 49 படமாக உருவாகப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது சிம்பு, ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்துவதால் அந்த படம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன், ரஜினிக்கும் கல்லூரி சம்பந்தமான கதையை கூறி இருப்பதால், சிம்புவுக்கு கூறிய அதே கதையை தான் பட்டி டிங்கரிங் செய்து ரஜினிக்கும் கூறியுள்ளார் என்று பல தகவல்கள் உலா வரத் தொடங்கியது. ரஜினிக்காக 'பார்க்கிங்' இயக்குனர் சொன்ன ஸ்கிரிப்ட்.... சிம்புவுக்கு சொன்னதை தான் பட்டி டிங்கரிங் பண்ணாரா?அதாவது ராம்குமார் பாலகிருஷ்ணன், ஸ்டுடென்ட் கதாபாத்திரத்தை பேராசிரியராக மாற்றி ரஜினியிடம் கூறியுள்ளார் என்று பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவுக்கு சொன்ன கதை வேறு. அந்த கதையை அவர் மாற்றவில்லை, அது அப்படியேதான் இருக்கிறது. ரஜினிக்காக அவர் வேறொரு கதையை தான் கூறி இருக்கிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ