காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.
வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் தனது மனைவியுடன் பெங்களூரில் உள்ள உறவினர் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பிருந்தாவன எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருக்கு செல்ல வண்டியில் ஏறும் போது கை பையில் இருந்த 13 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூவேந்தன் இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.பூவேந்தன் கை பையில் இருந்த 13 சவரன் நகையை திருடியது ஒரு வடமாநில பெண் என்பது அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர், மைசூர், மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியைச் சேர்ந்த துர்கா(45) என்ற பெண் நகைகளை திருடியது உறுதியானது. இதையடுத்து அவரை அங்கு சென்று காட்பாடி ரயில்வே போலீசார் கைது செய்து காட்பாடிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 13 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…


