spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து தற்குலை

திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து தற்குலை

-

- Advertisement -

 

திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து தற்குலை

we-r-hiring

திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து மரணம் அடைந்த  தொழில்நுட்ப பெண் சுதாவை அடையாளம் கண்ட போலீசார்.

தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா (30) மற்றும் கார்த்திக்(33) இருவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. இவர்கள் இருவரும் மென்பொருள் வல்லுநர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதியருக்கு  மூன்று வயதில் ஒரு மகன்.

சமீபத்தில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. கடந்த மார்ச் 23 அன்று கார்த்திக் விவாகரத்துக்கு முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த சுதா தனது மாமியாரின் உதவியை நாடி  சமரசம் செய்ய முயற்சித்துள்ளார். இருந்தும் கார்த்திக் அவர்களது உறவை முறித்துக் கொள்வதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில் தரமணியில் இருந்து வேளச்சேரி மேம்பாலத்திற்கு சுதா பைக்கில் சென்றிருக்கிறார். பைக்கை நிறுத்திய பின் ஃப்ளை ஓவர் சுவர் ஏறி குதித்து உள்ளார். சுதா குதித்ததை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

சுதா தன் கணவரின் விவாகரத்து  முடிவால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தற்கொலைக்கான வழிமுறைகளை ஆன்லைனில் தேடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ