மன்னார்குடியில் கோவில் திருவிழா சம்பந்தமான கூட்டத்திற்கு வந்த பாஜக பிரமுகர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொறியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியனாா். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விழல் காரத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த வாரம் காவடி திருவிழா நடைபெற்ற நிலையில் திருவிழா குறித்த கூட்டம் நடத்துவதற்காக தெருவாசிகளின் முக்கியஸ்தர்கள் மாரியம்மன் கோவில் அருகே இரவு கூடியிருந்தனர். அப்போது அதே தெருவை சேர்ந்த திருமேனி (எ) ராம்குமார் என்பவர் கோவிலுக்கு வந்து, அங்கு நின்று கொண்டிருந்த பொறியாளர் செழியனை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டான். கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த செழியனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவிழா தொடர்பாக கூட்டம் நடத்துவதில் உடன்பாடு இல்லாத திருமேனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெருவாசிகள் சிலரிடம் நான் தான் கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவேன் வேற யார் திருவிழாவை நடத்தினால் பல்வேறு பிரச்சனை ஏற்படும் என கொலை மிரட்டல் விடுத்தாக அந்த பகுதி தெருவாசிகள் கூறினார்கள். அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கெனவே அவரை தேடி வந்த நிலையில், செழியன் என்பவரை வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளான். தலைமறைவான திருமேனியை போலீசார் தேடி வருகின்றனர். திருமேனி பாஜகவின் முக்கிய நிர்வாகி. இவர் மீது பலகுற்றவழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை