spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் லெட்சுமி. இவர் மீது நில ஆவணங்களை முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்து தடையின்மை சான்று வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பாக சென்னை, திருப்பூர், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பத்திரங்கள், நில ஆவணங்கள் தொலைந்து விட்டால், புவனகிரியில் காணாமல் போனதாக முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்து தடையின்மை சான்று வழங்கி வந்ததாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

we-r-hiring

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. இதையடுத்து, முதற்கட்ட நடவடிக்கையாக லெட்சுமியை புவனகிரி காவல் நிலையத்திலிருந்து கடலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தனர்.

இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தார். அதாவது, அவர் முறைகேடாக நில ஆவணங்கள் குறித்து பதிவு செய்த சி.எஸ்.ஆர். மற்றும் சம்மந்தப்பட்ட நபர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் ,அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமி மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா, புவனகிரி காவல் ஆய்வாளர் லெட்சுமியை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

MUST READ