spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை - வாலிபர் கைது

மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது

-

- Advertisement -

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.வேலை பார்த்த வீட்டிலேயே கொலை – 20 பவுன் நகைக்காக நடந்தேறிய கொடூரம்…நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் மின் வாரியத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி ருக்குமணி (71).  இரண்டு மகன் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதால் ருக்குமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம்தேதி காலை ருக்குமணி மகன் பாலசுந்தர் சாப்பாடு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ருக்குமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் மற்றும் கைகளில் கிடந்த நகைகள் திருட்டு போயிருந்தது.

இது தொடர்பாக வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நகைக்காக ருக்குமணி கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அக்கம்பக்க வீடுகளில் உள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது அதில் சேலை உடுத்திய நபர் வந்தது தெரிந்தது. இதனால் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் களக்காட்டை சேர்ந்த விஜய் (வயது 27) என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ருக்குமணியின் கணவர் அர்ஜுனன் உடல் நல சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்த போது அங்கு விஜய் அவரை பராமரித்து வந்துள்ளார்.

we-r-hiring

இந்நிலையில் சில மாதங்களில் திடீரென்று விஜய் கடன் சுமையால் வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் அர்ஜுனன் இறந்ததை கேள்விப்பட்டு விஜய் அங்கு வந்து தூக்கம் விசாரித்து விட்டு  ருக்குமணி தனியாக இருப்பதை அறிந்து  சென்றுவிட்டார். நேரம் பார்த்து ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்த விஜய் அவரை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்தார் 20 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது. வேலை பார்த்த வீட்டிலேயே கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த சம்பவத்தில் வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!

MUST READ