spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்6 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை... 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த...

6 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை… 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்!

-

- Advertisement -

ஆந்திராவில் 6 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

we-r-hiring

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், மடகசிரா தொகுதிக்குட்பட்ட குடிபண்டா மண்டலம் திண்ணேஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பே சாமி. கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தனது மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக திப்பே சாமி 6 மாத ஆண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் சடலத்தை புதைத்துவிட்டு தலை மறைவாகினார். இந்த கொலை தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில்திப்பே சாமி மீது ஆந்திர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். எனினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வாழ்க்கை விசாரிக்கும் பணியில் காவல்துறையினர் மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கினர். காவல் உதவி ஆய்வாளர் கிராமத்தில் திண்ணேஹட்டி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, திப்பே சாமியின் நண்பரான  நாகராஜூ என்பவருக்கு, அவர் தனது 2வது மனைவியின் திருமண பத்திரிகையை அனுப்பியுள்ளது தெரியவந்தது. அதன் பேரில், நாகராஜு வீட்டில் சென்று போலிசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திப்பே சாமியின் புகைப்படத்துடன் கூடிய அவரது மகளின் திருமண பத்திரிகையை கைப்பற்றி போலிசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மகனைக் கொன்றுவிட்டு கர்நாடகாவுக்குத் தப்பிச்சென்ற திப்பே சாமி, அங்கு தனது பெயரை கிருஷ்ணா கவுட் என்று மாற்றிக்கொண்டு வேறு ஒரு  பெண்ணை 2வது  திருமணம் செய்து கொண்டதும், இத்தம்பதிக்கு  2 மகள்கள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்த திப்பே சாமி திண்ணைஹட்டியில் உள்ள தனது நண்பரான நாகராஜுக்கு பத்திரிகையை அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.

மேலும், சொத்து பிரச்சினை தொடர்பாவ அவர் திண்ணைஹட்டிக்கு வர உள்ளதும் போலிசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பேரில் வீட்டில் பதுங்கியிருந்த திப்பே சாமியையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 26 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்த காவல் துறையினருக்கு, சத்யசாய் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

MUST READ