திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று சாம்பாரில் எலி கிடந்த சம்பவத்தை தொடர்ந்து கேண்டினை இழுத்து சீல் வைக்க தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று பிற்பகல் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும் போது சாம்பாரில் எலி கிடந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேண்டினை ஆய்வு மேற்கொண்ட போது உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டு நெறிமுறைகள் படி உணவுகளை சமைக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது.
காலையில் டிபனுக்கு கொடுக்கப்பட்ட சாம்பாரில் எலி கிடந்துள்ளதாகும் அதே சாம்பார் பிற்பகல் உணவிற்கும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது சம்பவம் தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் கேண்டினை உடனடியாக இழுத்து சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலின்படி செயல்படாத கேண்டின் உரிமையாளர் மீது 5000 ரூபாய் அபராதம் விதிக்கவும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிற்பித்துள்ளது.
புதிய கேன்டீனுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதுவரை மாணவர்கள் வெளியில் இருந்தும், வீட்டிலிருந்தும் உணவைக் கொண்டு வந்து சாப்பிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை கேன்டீன் செயல்படாது எனவும் உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் – நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கு… வரும் 12ஆம் தேதி ஒத்திவைப்பு…