தெலுங்கானாவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் மயோனைஸூக்கு ஓராண்டு தடை என அரசு சார்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.பச்சை முட்டை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் மயோனைஸை மோமோஸ் , ஷவர்மா போன்ற உணவுப் பொருட்களில் வைத்து சாப்பிடுவது வழக்கமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஐதராபத்தில் மயோனைஸூடன் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தால், தெலுங்கானாவில் மயோனைஸ் உற்பத்தி விற்பனையை ஓராண்டுக்கு தடை விதித்தது இம்மாநில அரசு. பச்சை முட்டையால் உணவில் அதிகம் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சால்மோனெல்லா பாக்டீரியாவின் காரணமாக மயோனைஸ் கலந்த உணவு விஷமாக மாறலாம். இதன் காரணமாக முறையற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஏப்ரல் 8-ம் தேதியில் இருந்து ஓராண்டு காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.