

தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இடுப்பு எலும்பு முறிவுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
பாரத ராஷ்டிர கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், தனது பண்ணை வீட்டில் விழுந்ததில் காயமடைந்தார். அப்போது, அவருக்கு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தற்போது மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் அவரை பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திரசேகர் ராவிடம் நலம் விசாரித்தார்.
அருமை நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…. நடிகர் கமல்ஹாசன்!
அதைத் தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியும், சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களது குடும்பத்தினருடன் உரையாடிய நடிகர் சிரஞ்சீவி, சந்திரசேகர் ராவிற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.


