Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

-

 

சந்திரயான்- 3 கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்!
Photo: ISRO

சந்திரயான்- 3 திட்டத்தின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் நாளை (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு குறித்து ஆய்வுச் செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், சந்திரயான்- 3 திட்டத்திற்கான கவுண்ட்டவுன் 25.30 மணி நேரம் இருக்கும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, இன்று (ஜூலை 13) மதியம் 01.00 மணிக்கு திட்டமிட்டப்படி கவுண்ட்டவுன் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3,900 கிலோ எடைக் கொண்ட சந்திரயான்- 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திரயான்- 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வுச் செய்யும். அதேபோல், நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்ப வெப்பநிலை உள்ளிட்டவைக் குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15,000 கையடக்கக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு!

சந்திரயான்- 2 திட்டத்தில் லேண்டர், ரோவர் வேகமாக நிலவில் தரையிறங்கியதால் செயல்பட முடியாமல் போனது. இந்த முறை லேண்டரை மிக துல்லியமாகவும், இலகுவாகவும் தரையிறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்திரயான்- 3 விண்கலத்தின் சிறிய மாதிரியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று (ஜூலை 13) காலை 09.00 மணிக்கு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஞ்ஞானிகள், “சந்திரயான்- 3 திட்டம் வெற்றியடையும்” என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

MUST READ