
டெல்லி, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கனமழை வெள்ளத்தால், கடந்த இரண்டு நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கிஷன் தாஸ்!
இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் டெல்லியின் பல்வேறு சாலைகள் மழைநீரில் மூழ்கின. கிரேட்டர் கைலாஷ், பெரோஷா சாலை, லோதி எஸ்டேட் உள்ளிட்டப் பகுதிகளில் நேற்று (ஜூலை 09) கனமழை பெய்ததால், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குடியிருப்புகளையும் மழைநீர் ஆக்கிரமித்ததால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கனமழையால், டெல்லி சுந்தர் நகர் மார்க்கெட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ரோகிணி பகுதியில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் ஹரியானா மாநிலம், குருகிராமில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, டெல்லி- மானேசர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்தனர்.
தொடர் மழை காரணமாக, டெல்லி மற்றும் குருகிராமில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (ஜூலை 09) 40 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய விஷால்!
கடந்த 1982- ஆம் ஆண்டு ஜூலையில் ஒரே நாளில் 153 மி.மீ. மழை பதிவான நிலையில், அதே அளவு மழை நேற்று பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் நேற்று இயல்பை விட 81% அதிகளவு மழை பதிவாகியுள்ளது.