வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இறந்தியர்களுக்கு பயண உடைமைகளுக்கான புதிய விதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. பயண உடைமைகளுக்கான விதிகள் 2026 எனும் பெயரில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சுங்க வரி இல்லாமல் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கான சுங்க வரி விலக்கு வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெநாடுகளில் ஓராண்டுக்கு மேல் தங்கியிருந்த பெண்கள் 40 கிராம் தங்கத்தை சுங்க வரியின்றி கொண்டுவர முடியும் என்றும், ஆண்கள் 20 கிராம் தங்கத்தையும் சுங்கவரியின்றி கொண்டு வர முடியும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்த சலுகை, அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற ஆபரண நகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது… மெடாவை கண்டித்த உச்சநீதிமன்றம்…


