
கர்நாடகா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2003- ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது; அதைத் தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2004- ஆம் ஆண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடிய நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ள கர்நாடகா அரசு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்த அரசாணையையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
கர்நாடகா அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்தவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருவார்கள்; கடந்த 2006- ஆம் ஆண்டு மாநில அரசுப் பணிக்கு தேர்வான 13,000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.