Homeசெய்திகள்இந்தியா"மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

“மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

-

 

"மணிப்பூர் விவகாரம்- விவாதத்திற்கு தயார்"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!
Photo: SANSAD TV

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

வெப் தொடராக உருவாகும் குற்றப்பரம்பரை….. இயக்குனராக கம்பேக் கொடுக்கும் சசிகுமார்!

இந்த நிலையில், (ஜூலை 25) மாலை 05.00 மணிக்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டுறவுச் சங்க சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதுடன், அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து, மணிப்பூர் பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூச்சலிட்டனர்.

கடும் அமளிக்கிடையே கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டுறவுச் சங்க மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களை நிதி சிக்கலில் இருந்து மீட்க, இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஒரு கூட்டுறவுச் சங்கத்தை இன்னொரு கூட்டுறவுச் சங்கத்துடன் இணைக்கச் சட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில்….. பரத், ரகுமான் கூட்டணி!

அதைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். இரு அவைகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ