Homeசெய்திகள்இந்தியா"குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு"- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!

“குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு”- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!

-

 

பணிக்கு வராத ஊழியர்கள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மணிப்பூர் அரசு!
Photo: ANI

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

காவாலா பாடலுக்கு அளவில்லா ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி…….. நடிகை தமன்னா!

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அமைதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்; மற்ற அலுவல்களை ஒத்திவைத்து, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை அலுவல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!

அதில், “மணிப்பூர் வன்முறையில் எங்கள் சமூகத்தினர் 114 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மே 4- ஆம் தேதி அன்று இம்பாலில் குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்கள் வன்கொடுமை செய்துக் கொல்லப்பட்டுள்ளனர். லாங்கோல், நகாரியன் மலைப்பகுதிகளில் நர்சிங் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒட்டுமொத்த நாடும் கைகோர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டறிக்கையால், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ