spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்

இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்

-

- Advertisement -

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (HAL) “தேஜஸ்” என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. ஒற்றை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் விமானப் படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சிக்காக இரட்டை இருக்கைகள் கொண்ட 18 தேஜஸ் விமானங்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திடம் விமானப்படை ஒப்பந்தம் செய்தது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

we-r-hiring

அதன்படி முதல் விமானத்தை தயாரித்து அக்டோபர் 4ம் தேதி விமானப் படையிடம், எச்ஏஎல் நிறுவனம் ஒப்படைத்தது. இன்னிலையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தேஜஸ் போர் விமான தயாரிப்புகள் குறித்த நிலைமையை ஆய்வு செய்தார். மேலும் இரட்டை இருக்கைகள் கொண்ட இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். சுமார் 45 நிமிடங்கள் தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில் அதன் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி அவரது சமூக வலைதள எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

அதில் தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாகவும் விமானப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமான தயாரிப்பு நமது திறன்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாகவும் நாட்டிற்கு புதிய பெருமையை தேஜஸ் போர் விமான தயாரிப்பு அளித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இரட்டை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் மணிக்கு 2,205 வேகத்தில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் 8 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்க உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் 2026-2027 நிதியாண்டுக்குள் மீதமுள்ள போர் விமானங்களை ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

MUST READ