spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இந்தியை எந்த வடிவில் திணித்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம் – திமுக ராஜீவ்காந்தி உறுதி

இந்தியை எந்த வடிவில் திணித்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம் – திமுக ராஜீவ்காந்தி உறுதி

-

- Advertisement -

இந்தி Vs தமிழ், மத்திய அரசு  Vs மாநிலம் என இந்திய அரசியலே மாறி இருக்கும் நிலையில் இந்தியை எந்த வடிவில் திணித்தாலும் மொழி போர் வடிவில் திமுக மாணவரணி அதனை உறுதியாக முன்னெடுத்து செல்லும் என்று திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளாா்.இந்தியை எந்த வடிவில் திணித்தாலும் தொடர்ந்து எதிர்ப்போம் –  திமுக ராஜீவ்காந்தி உறுதிசென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை திமுக சார்பு அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக மாணவர் அணி தலைவராக இருந்த ராஜீவ்காந்தி திமுக மாணவர் அணி செயலாளராகவும், திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தற்போது திமுக கொள்கை பரப்பு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து தொண்டர்கள் அப்பா அப்பா என வரவேற்றனர். முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்த, ”இந்தி மொழியை கட்டாயமாக ஏற்றுக்கொண்ட பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் இங்கே வந்து கூலி தொழிலாளர்களாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் வேலை செய்து வருகிறார்கள். அதற்கு காரணம் ஹிந்தியை கட்டாயமொழியாக திணித்தது தான் என தெரிவித்தார்

we-r-hiring

இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாடு இன்று இந்தியாவில் சிறந்த மாநிலமாக இருக்கிறது.  பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் திமுகவும் இந்தி எதிரிப்பிற்கு போராட்டம் நடந்தினார்கள். அதில் திமுக மாணவரணி பெரும் பங்கு வகித்து. இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் தமிழக முதலமைச்சர் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என உறுதியோடு இருக்கிறார்.

மோடி VS ஸ்டாலின் என இந்திய அரசியல் மாறி இருக்கிறது. தமிழ் VS இந்தி என  மாறியிருக்கிறது.மத்திய அரசு VS மாநில அரசு என மாறியிருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு எப்பவுமே தனித்து சிறந்து விளங்கக்கூடிய ஒரு மாநிலம். இந்த போராட்டத்தை முதலமைச்சர் ஆரம்பித்திருக்கிறார்.  மொழிப்போர் வடிவில் எல்லா வேலையும் கழக மாணவரணி உறுதியாக முன்னெடுத்துச் செல்லும் எனவும் மாணவர்கள் களமாக தமிழ் மொழியையும், தமிழ் உரிமையை பாதுகாத்த மண் தமிழ் மண் தொடர்ச்சியாக எத்தனையோ மூத்த தலைவர்கள் கட்டிக் கொடுத்த இயக்கம் தான் திமுக என தெரிவித்தார்.

இன்றைய சூழலில் இரு மொழி கொள்கை உலகத்தில் சிறந்த மொழியாக உள்ளது. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கொண்டுவரக்கூடிய பாஜகவை போராட்ட களத்தில் தொடர்ந்து எதிர்ப்போம் என தெரிவித்தார்.

1930 – 1960 காலகட்டத்தில் திமுகவின் மாணவர் அணி போராட்டம் தான் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது அதேபோல இப்போதும் போராட்டங்களை மாணவரணி முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு துணை முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே இதை இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் என அறிவித்திருந்தார். அவரின் கூற்றின்படி உறுதியாக அன்று களத்தில் ஊடக வெளிச்சம் இல்லாத பல போராட்டங்களை முன்னெடுத்தோம்.  இன்றைய தொழில்நுட்பத்தோடு சமூக வலைத்தளத்திற்கு  ஏற்றவாறு இன்றும் இந்தியை திணிக்க நினைக்கும் நபர்களை எதிர்ப்போம்.

தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் பேசும் மக்களை இரண்டாம் மக்களாக மோடி அரசு நடத்தி வருகிறது. ஒருபோதும் இதை அனுமதிக்கமாட்டோம் மாணவரணி அதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் என தெரிவித்தார். திமுக அமைச்சர்களின் பிள்ளைகள் மும்மொழி படிக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்தான கேள்விக்கு மூன்றாவது மொழி கற்க வேண்டிய அவசியம் என்ன ,கற்றுக் கொண்டால் வாழ்வதாரம் மேம்படும் ,என ஆதாரம் இருக்கிறதா என கூறினார். தமிழ்நாட்டில் வந்து திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் படித்துவிட்டு யாரும் இங்கே வடமாநிலத்தில் இருந்து வேலைக்கு வரவில்லை. அவர்கள் இங்கே வந்து பானி என்றால் தண்ணீர் என தெரிந்துக்கொள்கிறார்கள்.

ஒருவேளை எங்கள் முதலமைச்சர் இருக்கும் வரை தமிழர்கள் ஒருபோதும் பீகார் ,உத்திரபிரதேசம் செல்ல மாட்டோம். அமெரிக்கா ,லண்டன், ஆஸ்திரேலியா கனவுகள் உள்ளது. மூன்றாவது மொழி படிக்க வேண்டிய தேவை இல்லை ,தேவைப்பட்டால் படித்துக் கொள்வோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆன பிறகு கர்நாடக சென்ற பிறகு I am proud கன்னடியன் என கார்நாடக மொழியை கற்றுக்கொண்டாரோ அதே போல திமுக இட ஒதுக்கீட்டில் படித்து வட மாநிலங்களுக்கு ஐபிஎஸ், ஐஏஎஸ் வேலைக்கு செல்லும் போது இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். எங்கள் மாணவர்கள் தேவைப்பட்டால் இந்தி கற்றுக் கொள்வார்கள் எங்கள் மீது இந்தியை திணிக்க கூடாது என்று தான் நாங்கள் சொல்கிறோம்” என தெரிவித்தார்.

பொய்யா சொல்கிறீர்கள்..? பாகிஸ்தானுக்கு பேரிடி கொடுக்கத் தயாரான பலூச் விடுதலைப் படை..!

MUST READ