Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் அல்ல; திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி

திராவிட மாடல் அல்ல; திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி

-

திராவிட மாடல் அல்ல; திராவக மாடல் அரசு- எடப்பாடி பழனிசாமி

கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுவிலக்கே ஒற்றை இலக்கு என கூறிவிட்டு 12 மணிநேரம் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கும் இந்த திமுக அரசு, இன்று கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்கள்.

மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து, கலாச்சாரத்தின் மீது திராவகத்தை வீசியுள்ள இந்த திராவக மாடல் அரசு, பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ