Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

கோவையில் மின்கம்பம் மீது கார் மோதி விபத்து : இளைஞர்கள் படுகாயம்..

-

- Advertisement -

கோவையில்  மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளானதில் இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

கோவை  செட்டிப்பாளையத்தைச்  சேர்ந்தவர் பிரகாஷ். இவரும்,  குலியகுளம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ரியாஸ் என்பவரும் நேற்று இரவு 11 மணியளவில் புளியங்குளத்திலிருந்து செட்டிப்பாளையம் நோக்கி வேகமாக காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை பிரகாஷ் ஓட்டிவந்த நிலையில் செட்டிப்பாளையம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஒரு மின் கம்பத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

Accident

இதில் காரில் பயணம் செய்த  இரண்டு இளைஞர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாகச் சென்றவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக  செட்டிப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு,  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ