தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் நீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நீரியல் & நீர்வள மேலாண்மை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகத்தில் காவிரி & அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் நேற்றிரவு நிலவரப்படி நீர் இருப்பு 77 டி.எம்.சி ஆகும். இது 4 அணைகளின் மொத்த கொள்ளளவில் 68% ஆகும்.

அதுமட்டுமின்றி, 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 36,221 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு தினமும் 3.15 டி. -.எம்.சி அளவுக்கு நீர் கிடைக்கும் நிலையில், அதிலிருந்து (குறுவை சாகுபடிக்காக) ஒரு டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசு மறுக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் தீர்ப்பையும் கர்நாடகா அரசு அப்பட்டமாக மறுதலித்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது.