spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

-

- Advertisement -
kadalkanni

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தாக்கல் செய்த அவதூறு வழக்கை கோப்புக்கு எடுக்கும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை (apcnewstamil.com)

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

MUST READ