spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் - நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

-

- Advertisement -

திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் - நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புதிருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது இடத்தில் உள்ள அரசியல்கட்சி கொடி கம்பங்களை அகற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதன்படி, திருமழிசையில் இருந்து திருவள்ளூர் வரை செல்லும் சாலையில் பொது இடங்களில் கட்சி கொடி மற்றும் கம்பங்கள் கல்வெட்டுகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் - நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகோட்ட பொறியாளர் டி.சிற்றரசு உத்தரவின்படி, உதவி கோட்ட பொறியாளர் மதியழகன் தலைமையில், உதவி பொறியாளர்கள் அரவிந்த், பிரசாந்த் ஆகியோர் திருமழிசையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையோரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசியல் கட்சிக் கொடி கம்பம் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றை அகற்றினார்கள். ‘‘இதுபோல் திருவள்ளூர் நகரத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும்என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பல இடங்களில் கொடி கம்பம் அகற்றப்பட்டு வருகிறது.

குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்

MUST READ