

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திற்கு சென்று நேரில் பார்வையிட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
‘நக்கலைட்ஸ்’ இயக்குநருடன் கைகோர்த்த நடிகர் மணிகண்டன்.. தொடங்கிய படப்பிடிப்பு!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “மழை பாதிப்பு தொடர்பாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் பாதிப்பைக் குறைத்திருக்கலாம். தூத்துக்குடியில் ஏற்கனவே 85% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுப் பெற்றிருந்தன. இரண்டரை ஆண்டுகளில் எஞ்சிய 15% பணிகளை தி.மு.க. அரசு முடிக்கவில்லை.
வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் நிவாரண உதவிகளை முதலமைச்சர் எப்படி கேட்க முடியும்? சேதங்களை ஆய்வுச் செய்து, கணக்கீடு செய்யாமல் டி.ஆர்.பாலு நிவாரணம் கேட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
புஷ்பா பட நடிகரை ஜாமீனில் எடுத்த படக்குழு… படப்பிடிப்புக்காக ரிஸ்க்….
தமிழக வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும். பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது; எங்களுக்கு குடிநீர், உணவுக் கிடைக்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் மக்கள் பசி, பட்டினியால் வாடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.


