சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பிஹார், தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் கணக்கெடுப்பு எடுப்பதற்கான துறை மத்திய அரசிடம் உள்ளது என்றும் ‘சாதிவாரியான கணக்கெடுப்பு மத்திய அரசுடன் தொடர்புடையது. எனவே சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டுள்ளனர்.
திமுக கூட்டணிக்கு க்ரீன் சிக்னல்… பிரேமலதா வைக்கும் டிமாண்ட் இதுதான்..!