- Advertisement -
சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத தொழிற்சங்க சட்டங்களுக்கு எதிரான அராஜகங்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு தலையிட வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)சார்பில் ஏப்ரல் 21-ல் சுங்குவார்சத்திரத்தில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.ஏப்ரல் 21-ம் தேதி சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,
- பெரும்பான்மை தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)அமைப்புடன் ஊதிய உடன்பாட்டை ஏற்படுத்த சாம்சங் நிர்வாகம் முன்வர வேண்டும்.
- நிர்வாகம் உருவாக்கியுள்ள சிறுபான்மை தொழிலாளர் கமிட்டியுடன் போடப்பட்ட சட்டவிரோத ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்து போடுமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்துவது அச்சுறுத்துவது போன்ற அராஜகங்களை கைவிட வேண்டும்.
- நிறுவனம் சொல்லும் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்து போட்டால் அடிப்படை ஊதியத்தில் 100% பணத்தை சம்பளத்தில் பரிசாக தருவதும் கையெழுத்து போட மறுக்கும் தொழிலாளிகளுக்கு பணம் இல்லை என்று சொல்லுவதும் அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கையை விடப்பட்டு அனைத்து தொழிலாளிகளுக்கும் அடிப்படை ஊதியத்தின் தொகை வழங்க வேண்டும்.
- சங்க நிர்வாகிகள் 23 பேர் அவர்களுக்கு எதிரான பொய் வழக்குகளையும் பணியிடை நீக்க நடவடிக்கைகளும் முழுமையாக கைவிடப்பட வேண்டும்.
- துரோக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுக்கும் தொழிலாளிகளை பணியிடை மாற்றம் செய்வது மருத்துவ ரீதியாக விடுப்பில் உள்ள தொழிலாளிகளை கடினமான வேலைகளில் ஈடுபடுத்துவது தனித்தனியாக அழைத்து அச்சுறுத்துவது போன்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களை நிர்வாகம் கைவிட வேண்டும்.
- 2500 க்கும் மேற்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளிகளை நேரடி உற்பத்தியில் சட்டவிரோதமாக ஈடுபடுத்துவதும் பல ஆண்டுகள் பணிபுரிந்த நிரந்தர தொழிலாளிகளை அவர்களுக்கு கீழே வேலை செய்யுமாறு அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்.
- தொழிலாளர் துறையில் நிலுவையில் உள்ள நிறுவனத்துக்கு எதிரான தொழிற் தகராறு சட்டம் 2 (ra) வழக்குகளில் உடனடியாக முறிவறிக்கை பதிவு செய்து செய்து குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
- 2024 அக்டோபர் மாதம் நிறுவனம் அறிவித்த உற்பத்தி ஊக்கத்தொகை பாக்கிகளை அனைத்து சிஐடியூ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
- பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
- நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரமும் வாரத்தில் ஐந்து நாட்கள் என்கிற முறையில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …