Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை- திருநாவுக்கரசர்

அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை- திருநாவுக்கரசர்

-

அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை- திருநாவுக்கரசர்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்றார். மேலும் இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், “செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை ஒருதலைப்பட்சமான, பாரபட்சமான கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமான பாஜக அரசினுடைய மோசமான நடவடிக்கை. ஊழல் தடுக்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்தல்ல, பாஜக அரசு கர்நாடகாவில் இருந்த போது 40 சதவீத ஊழல் ஆட்சி இருந்தது. தேர்தல் நேரத்தில் இது குறித்து அனைவரும் பேசினர். தற்போது மக்களால் அந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு மட்டும் இதுபோன்று செய்யவில்லை டெல்லியில் துணை முதலமைச்சரை இதுபோன்று செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை பரவலாக பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு நீதி அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு ஒரு நீதி பாஜக ஆளாத மாநிலத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி என அரசு இயந்திரத்தை தவறாக பாஜக அரசு பயன்படுத்துகிறது.

அமலாக்கத்துறை சோதனை பாஜக பழிவாங்கும் நோக்கத்துடனும், அச்சுறுத்தும் நோக்கத்துடனும் நடத்தப்படுகிறது என்று மக்களுக்கு தெரியும். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேகமாக பேசுகிறாறே தவிர விவேகமாக பேசவில்லை, அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சியினுடைய பிரதான தலைவரை பேசினால் அதிமுகவினர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களும் பதிலுக்கு பேச தான் செய்வார்கள். கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அண்ணாமலை நிதானமாக செயல்படவில்லை.

pt desk

அதிமுக தனித்து நிற்க வேண்டுமா? கூட்டணியில் நிற்க வேண்டுமா அல்லது அண்ணாமலை இடம் இவ்வளவு திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு இந்த கூட்டணியிலேயே தொடரட்டுமா? அல்லது மானத்தோடு கூட்டணியை விட்டு வெளியேற வேண்டுமா? என்பது அதிமுக தலைமை எடுக்க வேண்டிய முடிவு” என்றார்.

MUST READ