“அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களை குறிக்கும் கயிறுகள் டீ சட்டைகளை அணியதடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ சட்டைகளையும் அணிந்து திரைப்படப்பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறி செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளை போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு இடம் பெறக் கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறுவதாக இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர்களிடையே சாதி வெறி தலை தூக்காமல் இருப்பதற்கு தமிழ்நாடு அரசு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு பல பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி இருக்கிறது. அந்த பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். சமூக நீதி கொள்கையில் இது ஒரு முக்கிய அம்சமாகும் என திராவிடர் விடுதலைக் கழகம், பொதுச் செயலாளர், விடுதலை இராசேந்திரன் பாராட்டியுள்ளாா்.
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி: திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும்!