Homeசெய்திகள்தமிழ்நாடு"மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்- க்கு சிலை"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்- க்கு சிலை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்- க்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

we-r-hiring

“தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முன்னாள் பிரதமர், சமூக நீதி காவலர் பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த வி.பி.சிங்- க்கு மரியாதைச் செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் 20- ஆம் தேதி அன்று சட்டமன்றப் பேரவை விதி 110- ன் கீழ் அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீந்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங்- க்கு மகனாகப் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங், செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர்.

பின்னாளில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தகத்துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும், நிதித்துறை அமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989- ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமரானார்.

அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது பட்டியலின, பழங்குடியினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27% இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்.

தமிழகத்தை தனது இரத்த சொந்தங்களை வாழும் மாநிலமாக நினைத்த வி.பி.சிங், தந்தை பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக் கொண்டார்.

ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடுமையானது ‘அவமானம்’. இந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்து தான் பெரியாரின் ‘சுயமரியாதை’ என்று சொன்னவர் வி.பி.சிங். முத்தமிழறிஞர் கலைஞரை தனது சொந்த சகோதரர் போல் மதித்தவர். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல், ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று பாராட்டியவர் வி.பி.சிங்.

அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய வேதாந்தா!

அத்தகைய சமூக நீதிக் காவலருக்கு அவருடைய பிறந்தநாளான இன்று, ஏற்கனவே ஏப்ரல் மாதம் 20- ஆம் தேதி அன்று சட்டமன்றப் பேரவையின் விதி 110- ன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கு இணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர் பெருமக்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று, அரசு அதனை பரிசீலித்து ‘சமூக நீதிக் காவலர்’ வி.பி.சிங்- க்கு சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ