spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

“தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

-

- Advertisement -

 

"தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

we-r-hiring

தமிழ்நாடு அரசு தயாரித்த உரை உப்பு, சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம்” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்த நிலையில், சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இன்றைய கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. புதிய மக்கள் நலத் திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்காமல் ஆளுநர் உரை உள்ளது.

உரையைப் புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அரசு தயாரித்த உரை உப்பு, சப்பு இல்லாத ஊசிப்போன உணவுப் பண்டம். சபாநாயகர் அப்பாவு பல மரபுகளைக் கடைப்பிடிக்கவில்லை. அரசுக்கும், சபாநாயகருக்கும், ஆளுநருக்கும் இடையேயான தான் பிரச்சனை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைப்பிடிக்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ