கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத மகளிர் புதிதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி பயன் பெறலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதியுடைய மற்றும் இதுவரை பயன்பெறாத மகளிர் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க விரும்பும் மகளிர், தங்களது அருகிலுள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் போன்ற ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. அங்கு அவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படும். தகுதி மற்றும் தகுதி இல்லாதவர்களின் விவரங்களை அறிய, அதிகாரப்பூர்வ இணையதளமான kmut.tn.gov.in தளத்தைப் பார்க்கவும் என தெரிவித்துள்ளாா்.
மக்களை காக்க மனிதனை மிருகமாக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் – அன்புமணி