பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2024-25ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 11-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,366 மாணவர்கள், 2,995 மாணவியர்கள் என மொத்தம் 5,361 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 1,783 மாணவர்கள் (75.36%), 2,557 மாணவியர் (85.38) என மொத்தம் 4,340 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81% ஆகும். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் அதிகமாகும்.
பாடவாரியாக மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடப்பிரிவில் 1, கணினிப் பயன்பாடுகள் பாடப்பிரிவில் 1, வணிகவியல் பாடப்பிரிவில் 4 என 6 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். லாய்ட்ஸ் சாலை-சென்னை மேல்நிலைப்பள்ளி 100 % தேர்ச்சி பெற்றுள்ளது.

மேலும், மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 68 மாணவ, மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 249 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – ராமதாஸ் சூளுரை