spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள்

வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள்

-

- Advertisement -

அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகள் பலருக்கும் அபாயகரமான அனுபவமாக மாறி வருகின்றன. இந்த அழைப்புகளை முறையாக தடுக்க மற்றும் பாதுகாப்பாக இருக்க சில முக்கிய வழிமுறைகள்:வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள்

அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் இருந்து அழைப்புகள் வருவது பலருக்கும் உண்டாகும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது மோசடிகளுக்கும் தகவல் திருட்டுக்கும் வழிவகுக்கக்கூடியதாக உள்ளது. இதைப் பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கும் மோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கு; ஸ்பாம் எண்களை சிவப்பு நிறத்தில் காட்டி எச்சரிக்கும் TrueCallerஐ உபயோகிக்கலாம். Truecaller போன்ற செயலிகள் மூலம் யார் அழைக்கிறாா்கள் என்பதை அடையாளம் காண முடியும். தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை பிளாக் செய்யவும் வழி உள்ளது.

we-r-hiring

தொடர்ந்து முறையற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை பிளாக் செய்யுங்கள் அல்லது அது குறித்து 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்கவும் . இது மோசடிகளுக்கு எதிரான துரித நடவடிக்கையில் உதவி செய்யும். வாட்ஸ்அப்பில் வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க “Silent Unknown Calls” என்ற அம்சத்தை பயன்படுத்தலாம். இதனால், உங்கள் தொடர்புகளில் இல்லாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகள் தடுக்கப்படும். அச்சுறுத்தலுக்கோ அல்லது பணமோ கேட்கப்படும் அழைப்புகளை தவிர்க்க பயன்படுத்தலாம்.

2024ல் இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய பெரிய சைபர் தாக்குதல்கள்..!

 

MUST READ