spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராமில் கனரக வாகன ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

பட்டாபிராமில் கனரக வாகன ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

-

- Advertisement -

ஆவடி பட்டாபிராம் அருகே கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

we-r-hiring

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட T.9 பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுற்றுப்பகுதியில் கனரக வாகன ஓட்டுநர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் விபத்துக்கள் நடப்பதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆவடி போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் கனரக வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  இதில் உதவி ஆணையாளர் கனகராஜ், வாகன ஒட்டுநர்களுக்கு வாகனம் ஓட்டுவதை பற்றி அறிவுரைகளும், விபத்தில்லா பகுதிகளாக ஆவடி மாற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

ஆவடி

பின்பு மேடையில் பேசிய ஆவடி போக்குவரத்து உதவி ஆணையாளர் கனகராஜ், வாகனஓட்டிகள் விரைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தாதீர். நீங்கள் சரியான பாதையில் சென்றால் எதிரே வரும் வாகனம் விபத்து ஏற்படுத்தும் ஆகையால். நேரம் கட்டுப்பாடு அவசியம் என்றும், சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு முக்கியம் என்றும் கூறினார். அதேபோல் எந்த வாகன ஓட்டுனரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.

நீங்கள் பணி முடிந்து வாகனத்தை விட்டு இறங்கி விட்டீர்கள் என்றால் வேறு ஒரு அழைப்பில் உங்களுக்கு சவாரி வந்தால் தயவுசெய்து வாகனம் எடுத்துச் செல்ல வேண்டாம், மாற்று ஓட்டுனர் ஏற்பாடு செய்து அனுப்பி சவாரிகள் பார்க்கவும் என்றும் அறிவுறுத்தினார்.  இதேபோல் விபத்து ஏற்பட்டால் உங்கள் குடும்பம் தான் பாதிக்கப்படும் என்றும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு முகாமில் பட்டாபிராம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் ராமசாமி மற்றும் சூசை நாதன் மற்றும் சக போக்குவரத்து பெண் காவலர்களும் திரளாக ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்.

MUST READ