spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஉதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!

உதயநிதிக்கு குறி! வெளுத்த உச்சநீதிமன்றம்! விளாசிய பத்திரிகையாளர் மணி!

-

- Advertisement -

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

m

we-r-hiring

டாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது மிகவும் முக்கியமான தீர்ப்பாகும். டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வழக்கமாக ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றம் தடை விதிப்பது கிடையாது. ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது. 2017ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் பி.எம்.எல்.ஏ சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் காரணமாக அமலாக்கத் துறை அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த சட்டத்திருத்தத்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. ஒரு பக்கம் தங்களை எதிர்ப்பவர்களை காலி செய்ய அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் செந்தில் பாலாஜியை பழிவாங்கினார்கள். அவர் மீதான நடவடிக்கை என்பது அவர் திமுககாரர் என்பதும், அவர் பாஜகவுக்கு வர மறுத்ததும் தான். இதன் அடுத்தக்கட்டம் தான் டாஸ்மாக் விவகாரம்.

வரம்பு மீறி போறீங்க.. அமகாக்கத்துறைக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்..
2003ஆம் ஆண்டு டாஸ்மாக் சில்லறை விற்பனையில் ஈடுபடும் என ஜெயலலிதா அரசு முடிவு செய்த பின்னர் கடந்த 22 வருடங்களாக டாஸ்மாக்கில் ஊழலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருக்கிறது. யாருடைய ஆட்சியாக இருந்தாலும் அதுதான் நடைபெறுகிறது. அமலாக்கத்துறை முகத்தில் உச்சநீதிமன்றம் கரியை அள்ளி பூசிவிட்டதாக தான் கருதுகிறேன். இதை வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டும் பார்க்க முடியாது. 2014 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 41 எப்.ஐ.ஆர்கள் எல்லாம் சேர்த்துதான் உள்ளது. 2021-2025ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சில எப்.ஐ.ஆர்கள் மட்டுமே போடப்பட்டது. அதுதான் அவர்களை காப்பாற்றி உள்ளது. தலைமை நீதிபதி கேட்கும் மற்றொரு கேள்வி மிகவும் முக்கியமானது. தனிப்பட்ட நபர்கள் மீது வழக்கு உள்ளபோது, அவர்களிடம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம். ஆனால் எப்படி ஒரு அரசு நிறுவனத்தின் மீது சோதனை நடத்தலாம்? என்று கேட்கிறார்கள்.

பாஜக ஏன் சோதனை நடத்துகிறது என்றால் திமுகவை காலி செய்ய வேண்டும். எதற்காக என்றால் 2026ல் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. 2029ல் நான்காவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு காங்கிரசை வீழ்த்த வேண்டும். காங்கிரசை தூக்கி சுமக்கிற ஒரே கட்சி திமுக. அதைவிட முக்கியமானது 3 தேர்தல்களிலும் 40 சீட்டுகளை சொலையாக தூக்கி திராவிட கட்சிகளுக்கு கொடுத்தது. ஆளுநர் விவகாரம், நீட், தேசிய கல்விக்கொள்கை என அனைத்து விவகாரங்களிலும் திமுகவினர் எதிர்க்கிறார்கள். அரசியல் ரீதியாக பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான அஜெண்டாவை கட்டமைப்பது ஸ்டாலின்தான். அதனால் 2026ல் என்ன விலை கொடுத்தாவது திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளது. அதற்கு அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்தியது. அதை உச்சநீதிமன்றம் தவறு என்று சொல்கிறது.

கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் டாஸ்மாக் டாஸ்மாக் என்று பேசினார்கள். எல்லோரும் இது உதயநிதியிடம் போய் நிற்கும் என்றார்கள். ரத்திஷ் என்பவர் தலைமறைவாகி விட்டார். மற்றொருவர் ஆகாஷ் பாஸ்கரன். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.முத்துவின் பேத்தியை திருமணம் செய்துள்ளார். அன்பில் மகேஷின் உறவினர். இதெல்லாம் யூகங்களை வளர்க்க உதவின. திமுக அரசின் மீது உள்ள வெறுப்பில், உதயநிதி எப்படியாவது மாட்டிவிடுவார் என்று எதிர்பார்த்தார்கள். இவை எல்லாம் ஒரு மலிவான கருத்துக்கள் தான். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இன்றி உள்ளன. அண்ணாமலை இருந்தவரை பாஜக மக்களுக்கு தெரிந்து கொண்டிருந்தது.

மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள்  அடுத்த மாதம் விண்ணப்பிக்கலாம் - துணை முதல்வர் அறிவிப்பு...

அமலாக்கத்துறை ஆயிரம் கோடி முறைகேடு என்று சொன்னது. அதற்கு ஆதாரம் எங்கே என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது. டாஸ்மாக் வழக்கில் தடை விதித்துள்ளது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் குறி எல்லாம் உதயநிதி மீது தான் இருந்தது. அவர்கள் மீது தவறு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் விசாரிக்க ஒரு முறை வரைமுறை உள்ளன. உச்சநீதிமன்றம் சொல்வது போல இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலாகும். இனி வரும் காலங்களில் பிடிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை வேட்டை நாய் போல ஏவிவிட முடியாது. டாஸ்மாக் விவகாரத்தில் தனி நபர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தேவையின்றி அமலாக்கத்துறை எப்படி வரலாம்? மேலும் தனி நபர்களுக்கு எதிராக வரலாம். ஆனால் ஒரு அரசு நிறுவனத்திற்கு எதிராக எப்படி சோதனை நடத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

டாஸ்மாக் விவகாரத்தை வைத்து மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முயன்றால் அது தோல்வியில்தான் முடியும். ஏனென்றால் கண்டனம் தெரிவிப்பதற்கு கூட தகுதியும், திறமையும் வேண்டும். திமுகவை டாஸ்மாக்கை வைத்தோ, சிபிஐ வைத்தோ, நீதித்துறையை வைத்தோ முடித்துவிடலாம் என்று நினைத்தால், அது சாத்தியம் இல்லை. திமுகவினர் சட்ட ரீதியாக தவறுகளை செய்து மாட்டக் கூடியவர்கள் இல்லை. அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலிமையான கூட்டணி அமைத்துதான் திமுகவை வீழ்த்த முடியும். துரதிர்ஷ்டவசமாக நீதித்துறை சில நேரங்களில் கொடுக்கிற தீர்ப்புகள் மாநில உரிமைகளுக்கு எதிராக தான் உள்ளன. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான 10  சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தவறானதாகும். இந்த இடத்தில் இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது தெரிகிறது. வில்சன் உயர் கல்வித்துறையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவர் கால அவகாசம் கேட்கிறார். ஆனால் தரவில்லை. ஏன் அவசரப்பட்டு இடைக்காலத்தடை விதிக்கிறார்கள்.

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு

திமுக மிகவும் வலிமையான அரசியல் கட்சியாகும். 75 ஆண்டுகளில் 50 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாக இருந்துள்ளனர். இன்று ஒவ்வொரு அமைப்பிலும் அவர்கள் சண்டையிடுகின்றனர். அவர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கலாம். அரசியல் ரீதியாக ஒரு பக்கம் போராட்டம். ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு நேரட்டிவை கட்டுப்படுத்துவது, மற்றொருபுறம் சட்டத் துறையை சிறப்பாக செயல்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான தீர்ப்புகளை மிக விரைவாக பெறுகின்றனர். எந்த வழக்கில் எந்த வழக்கறிஞரை நிறுத்துவது என்று அவர்களுக்கு சரியாக தெரிகிறது. அனைத்து விதமான தாக்குதல்களையும் அவர்கள் சிறப்பாக எதிர்கொள்கிறார்கள். மோடி போன்ற அரக்கத்தனமான மத்திய அரசை எதிர்கொள்ள ஒரு அரசியல் முதிர்ச்சி இல்லாவிட்டால் தோற்றிருப்பார்கள். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகாவும்,  சிறப்பாக எதிர்கொண்டு பதிலடி கொடுக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ