மருத்துவர் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் காரணமாக பாதிக்கப்பட போவது பாமக தொண்டர்களும் கட்சியும் தான் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு மற்றும் அன்புமணி மீது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீருடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவருடைய ஒரே மகனான அன்புமணி இப்படி ஒரு நிலைக்கு தள்ளிவிட்டார் என்கிறபோது உண்மையிலேயே பாவமாக தான் உள்ளது. மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கு என்ன பிரச்சினை என்றால்? வீட்டிற்குள் பேச வேண்டியதை வெளியே பேசி விடுவார்கள். வெளியில் என்ன எல்லாம் பேச வேண்டுமோ, அதை வீட்டிற்குள் பேசி விடுவார்கள். ஏற்கனவே ஒரு பொதுக்கூட்ட மேடையில் தந்தையும், மகனும் மோதிக் கொண்டார்கள். அதை மனதில் வைத்தாவது அவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அடுத்து நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாடு சண்டை இல்லாமல் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் அதிர்ச்சிகரமான பல செய்திகளை சொல்கிறார். பெற்ற தாயின் மீது பாட்டிலை எடுத்து எரிந்துவிட்டான் என் மகன் என்று ராமதாஸ் சொல்கிறார். குடும்பத்தில் பேசி தீர்க்க வேண்டியதை சந்தைக்கடையில் வந்து விற்பதை போல எல்லாவற்றையும் ராமதாஸ் கொட்டித்தீர்த்துவிட்டார். அவர் பேசியும் அன்புமணி கேட்காததால்தான் அவர் வெளியே தெரிவித்துள்ளார். இவர்களை நம்பி ஒரு கட்சி, ஒரு சாதிக்கூட்டம் உள்ளது. அவர்களின் நிலை என்னவாகும். கட்சியினரை எப்படி இவர்கள் வழிநடத்துவார்கள்.
தனது நட்பு வட்டத்தையும், உறவினர்களை அழைத்துப் பேசி குடும்ப பிரச்சினையை தீர்க்காமல், வெளியில் வந்து கெஞ்சுகிறார். அன்புமணிக்கு 35 வயதில் மத்திய அமைச்சர் ஆக ஆக்கியது தன்னுடய தவறுதான் என்று ராமதாஸ் சொல்கிறார். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரும் என்பார்கள். இன்றைக்கு அவர்களாக கடைத்தெருவுக்கு வியாபாரம் செய்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த மருத்துவர் ராமதாசை எழுப்பி காரில் ஏற்றிச்சென்று மோடியை சந்திக்க வைத்திருக்கிறார்கள். இதை நாம் முன்பே சொல்லியிருந்தோம். தற்போது அவர் வெளியில் தெரிவித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும், அவரது மனைவியும் ஆளுக்கு ஒரு காலை பிடித்துக்கொண்டு கதறினார்கள் என்றும் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வீட்டிற்குள் நடைபெற்றது எல்லாவற்றையும் அவர் வெளியே சொல்லிவிட்டார். அன்புமணி எதற்காக இந்த வேலையை பாத்திருக்க வேண்டும் ஒன்று பெருமளவு பணத்திற்காக செய்திருக்க வேண்டும். அல்லது சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக பார்த்திருக்க வேண்டும்.
அன்புமணி என்றி ஒரு தனிப்பட்ட நபர் சிறைக்கு செல்லாமல் தவிர்ப்பதற்கும், ஊழல் செய்து வைத்திருந்த பணத்தை காப்பாற்றுவதற்கும் கட்சியை பாஜகவுடன் கூட்டணி சேர்ப்பார்களாம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஈசிஆரில் பங்களா வாங்க வேண்டும் என்பதற்காகவும் 2 கோடி வன்னியர்களை கொண்டுபோய் வடநாட்டவர்களிடம் அடகுவைத்து விடுவீர்களா? ராமதாஸ் தனித்து நின்றே 3, 4 இடங்களில் பாமக வென்றிருப்பதாகவும், இன்றைக்கு கூட்டணி வைத்தே அதே இடங்கள்தான் வருகிறது. இதற்கு என்ன காரணம்? என்று ராமதாஸ் கேட்கிறார். பதவியில் இருந்தபோது லஞ்சம் வாங்கி திளைத்துவிட்டு, சிபிஐ கேசில் இருந்து தப்பிக்க பெற்ற தந்தையின் காலை பிடித்து கதறக்கூடிய அன்புமணி, எப்படி வன்னிய மக்களை காப்பாற்றுவார். எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார். அன்புமனி எம்.பி. ஆக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்திற்கே போகவில்லை. பாஜகவினர் போட்ட தீய சட்டங்களுக்கு, இந்திய மக்களுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களுக்கு எல்லாம் கையழுதது போட்டவர்தான் அன்புமணி.
ஒரு தமிழர் கட்சி, தமிழர்களுக்காக எதாவாது செய்வார் என்று இருந்த தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார். தன் மனைவி மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். படிப்பு அறிவு இல்லாத பாமரன் கூட தன் தாய்மீது பாட்டிலை எடுத்து வீசமாட்டார். அன்புமணி, தந்தை முன்பு பதவிக்காக தாய் ஏதோ பேசிவிட்டார் என்பதற்காக பாட்டிலை வீசி தாக்கியுள்ளார். அப்போது அவருக்கு எவ்வளவு ஆத்தரம் பாருங்கள். மன்னராட்சி காலத்தில் பதவிக்காக உறவினர்களை கொல்வார்கள். அதிலும் அன்புமணி மருத்துவம் படித்துள்ளார். சவுமியா அன்புமணி பசுமை தாயகம் என்கிற பெயரில் செடிகளை காப்பாற்றுகிறார். மாமனார் – மாமியாரை இப்படி செய்துவிட்டு நீங்கள் என்ன போய் செடிகளை பாதுகாக்க போகிறீர்கள்?. செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் கொதித்து, வெடித்து சிதறியுள்ளார். கண்ணீர் சிந்தியுள்ளார். ஒரு மகனை பெற்று, அவருக்கு பதவியும் கொடுத்து, காலம் போன கடைசியில் கண்ணீரையும் சிந்தி, மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில் யார் பக்கம் தவறு உள்ளது என்பது முக்கியமில்லை. பாமக என்கிற கட்சி காலியாகிவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.