spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடி வென்றது செல்லாது! இந்தியா டுடே ஃபேக்ட் செக்! சிக்கலில் தேர்தல் ஆணையம்!

மோடி வென்றது செல்லாது! இந்தியா டுடே ஃபேக்ட் செக்! சிக்கலில் தேர்தல் ஆணையம்!

-

- Advertisement -

2024 மக்களவை தேர்தலில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடியதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரித்துள்ளதாவது:- ராகுல்காந்தி செய்த மிகப்பெரிய சம்பவம் எது என்றால், தேர்தல் ஆணையத்தின் மோசடியை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டிய இந்த நிகழ்வு தான். ஒரு புலனாய்வு அமைப்பை வைத்து, கிட்டத்தட்ட 6 மாத காலம் தரவுகளை கண்டுபிடித்து, அதனை ஆய்வு செய்து, தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். ராகுல்காந்தி சொல்வது தரவுகள்தான். அது நிரூபிக்கப்பட்டால் தான் ஆதாரம் என்று சொல்கிறார்கள். இந்த ஆதாரங்களை கொடுத்தது தேர்தல் ஆணையம்தான். அப்போது, அவர்கள் கொடுத்ததில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா? கர்நாடகாவில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் சொன்னநிலையில், 9ல் தான் வெற்றி பெறுகின்றனர்.  தோல்வி அடைந்த 7 தொகுதிகளில் மிகவும் மோசமாக தோற்ற ஒரு இடத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யலாம் என பெங்களுரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியை சேம்பிள் ஆக எடுத்துக்கொண்டனர். ஒட்டுமொத்தமாக தொகுதியில் 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக மகாதேவ்புரா தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து, 14 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக விழுந்துள்ளது. அந்த தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு அதிக வாக்குகள் விழுந்தது எப்படி என்று ஆய்வு செய்தனர். அதற்கான தரவுகளை வழங்கியது தேர்தல் ஆணையமாகும்.

காங்கிரஸ் தரப்பில் டிஜிட்டல் தரவுகளை வழங்க கோரிய நிலையில், அதனை பிடிஎப் ஃபைலாக வழங்கி இருந்தால் மிகவும் எளிமையாக ஆய்வு செய்திருக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையம் 7 அடி உயரத்துக்கான அச்சடிக்கப்பட்ட தரவுகளை வழங்கினார்கள். தேர்தல் ஆணையம் வாக்காளர் சேர்க்கை பணிகளுக்காக ரூ.200 கோடி செலவு செய்து, புதிய செயலியை உருவாக்கினார்கள். வாக்காளர் அடையாள அட்டைகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தனர். அப்படி இருக்கும்போது, போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் வசதி அந்த செயலியில் இல்லையா? ஒரே மாதிரியான நபர்களை அடையாளம் காணும் வசதிகள் இல்லையா? பின்னர் எதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்? இந்தியா டுடே நடத்திய ஆய்வில் சின்ன வீட்டில் 80 பேர் தங்கி வாக்கு அளித்தது உண்மைதான் என்று கண்டறியப்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள். எப்படி சின்ன வீட்டில் 80 பேர் தங்க முடியும்?. அவர்கள் அனைவருக்கும் அந்த சின்ன வீடுதான் ஆதாரமா? அவர்கள் வளரவே இல்லையா? அந்த அறையில் உள்ளவர்களை கண்டறிந்ததன் மூலம் கோடி மீடியாவான இந்தியா டுடேவே ராகுலின் குற்றச்சாட்டு உண்மை என்று கண்டுபிடித்து சொல்லிவிட்டது. கர்நாடகாவில் உள்ள யூடியூபர்கள் நேரடியாக, பாஜகவின் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி போலியான வாக்காளர்களை சேர்க்கிறார்கள். சிறுபான்மை மக்கள், தலித்துகள் போன்றவர்களின் வாக்குகளை எப்படி நீக்குகிறார்கள் என்று தெளிவான வீடியோ போட்டு நிரூபித்துள்ளனர்.

வாக்கு திருட்டு மோசடி என்பது நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. எங்கெல்லாம் பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளதோ? எங்கெல்லாம் பாஜக 5 – 10% சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளதோ? அங்கே பாஜகவை உயர்த்தி காண்பிக்க வேண்டும். போலியான அடையாள அட்டைகள் 4 தொகுதிகளில் இருப்பதை தேர்தல் ஆணைய தரவுகளில் இருந்து தான் ராகுல்காந்தி எடுத்துக்காட்டி உள்ளார். முகவரியில் பூஜியம். தந்தை பெயர் ஐ, ஜே. கே. எல் என்று வந்துள்ளது. ஒரே முகவரியில் 80 முதல் 100 பேர் வரை இருக்கின்றனர். அப்போது எதற்காக இந்த தேர்தல் ஆணைய மென்பொருள் செயல்படுகிறது? இளம் வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளவர்களுக்கு எல்லாம் 80 வயது, 90 வயது உள்ளது. இவர்கள் எல்லாம் வாக்களிக்க வந்திருப்பார்களா? 0 என்கிற முகவரியில் உள்ள 80 பேரும் வாக்களிக்க வந்திருப்பார்களா? அங்கே தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்கின்றனர். வாக்காளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காண்பித்துவிட்டு, இந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டார்கள் என்று  போலியாக கட்டமைத்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்களை திருத்தி, சம்பந்தப்பட்ட நபருக்கு அந்த வாக்குகள் விழுந்ததாக மாற்றி அமைக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல்

வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு மேல் அதிக வாக்காளர்கள் இருந்தார்கள் என்கிற போது, அதற்கான சிசிடிவி கேமரா காட்சிகளை ராகுல்காந்தி கேட்கிறார். ஆனால் அதனை சேமித்து வைக்கும் வழக்கம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. நாடு முழுவதும் மாலை 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில்  சராசரியாக 4 சதவீதத்தில் இருந்து 10 முதல் 12 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்து இருக்கிறது. 5 மணிக்கு மேல் பதிவான வாக்குகளை 3 நாட்கள் கழித்து அறிவிக்கிறார்கள். இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில், 4.72 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. இது 4.65 கோடி அளவுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்? மகாதேவ்புரா தொகுதியில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 250 வாக்குகளை தேர்தல் ஆணையம் மோசடி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் வழங்கிய அந்த ஆதாரங்களை தான் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போகிறார். தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை ராகுல்காந்தி குலைப்பதாக சொல்கிறார்கள். ரூ.2,000 கோடி செலவு செய்து, மென்பொருளை உருவாக்கி அதில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், ஒரே புகைப்படம் பல இடங்களில் பயன்படுத்தப்படுவதை கண்டறியும் வசதி இல்லை. தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. அது பாஜகவின் ஐ.டி.விங் ஆக செயல்படுகிறது. தவறு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராகுல்காந்தி சொல்கிறார்.

தேர்தல் ஆணையம் தவறு செய்தால் கேட்க முடியாதா? மகாதேவ்புராவில் 1750 வாக்காளர்களை போலி வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். அவர்களின் வாக்குகளை போடாமலேயே, வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளீர்கள். புதிய வாக்காளர்களில் 33 ஆயிரம் பேரில் 80 சதவீதம் பேர் 90 வயதுக்கு மேற்பட்டவர்கள். எப்படி இவர்கள் மாலை 5 மணிக்கு மேல் போய் வாக்களித்து இருப்பார்கள்?. அந்த 33 ஆயிரம் வாக்குகளை போடாமல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை கூட்டுவதற்கு உங்களுக்கு 3 நாட்கள் ஆகியுள்ளது. இவ்வளவு தவறுகளையும் செய்துவிட்டு தேர்தல் ஆணையம் நியாயவான் போன்று பேசுகிறது. அதற்கு சிலர் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என்றால்? எந்த அளவுக்கு இங்கே ஜனநாயகத்தின் விழுமியங்கள் காலில் போட்டு மிதிக்கப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்கள், போலி முகவரி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் மூலமாக ஒரு தொகுதியிலேயே 1 லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர். இதேபோல் தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கினால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஆய்வு செய்யலாம். ஆனால் அதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. 2024 மக்களவை தேர்தல் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். 2024 மக்களவை தேர்தல் போலியாக நடத்தப்பட்டது என்று இந்த ஆதாரங்களை வைத்து தேர்தலை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு இந்த தேர்தல் ஆணையத்தின் மென்பொருளை சுதந்திரமான குழு அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அல்லது இந்த மென்பொருளை ஒப்பந்தம் செய்த தேர்தல் ஆணைய அதிகாரி மீது ஊழல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். 2024 மக்களவை தேர்தல் செல்லாது என்று அறிவித்து, நாடாளுமன்றத்தை உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். புதிய தேர்தல், 100 சதவீத விவிபேட் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு நடைபெற வேண்டும். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், விவிபேடில் வந்த ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் மூலம் நடத்தினால் தான் இது சாத்தியமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ